பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (13)
Advertisement
CoronaVirus, Spread,GermanStudy, Import, கொரோனா, வைரஸ், பரவுதல், ஆய்வு, இந்தியா, சீனா,

புதுடில்லி: இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக ஜெர்மனியின் ஹம்போல்ட் பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிற்கு இதுவரை 813 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50,000 பேர் வரை வைரசால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லி வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இது குறித்து ஜெர்மனியின் ஹம்போல்ட் பல்கலை மற்றும் ராபர்ட் கோச் நிறுவனம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உலகம் முழுவதும் 4000 விமான நிலையங்களில், சுமார் 25 ஆயிரம் பேரிடம், அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவரும் பயணிகள் மூலம் வைரஸ் பரவுவது குறித்து கணக்கிடப்பட்டது.




ஆய்வின் படி, உலகளவில் மொத்தம் 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. அதில், இந்தியா 17வது இடத்தில் உள்ளது. அதாவது, விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களில் 0.219 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விமான நிலையங்களில் டில்லி விமான நிலையத்திற்கு வருவோரில் 0.066 சதவீதத்தினரும், மும்பை விமான நிலையத்தில் 0.034 சதவீதத்தினரும், கோல்கட்டா விமான நிலையத்தில் 0.020 சதவீதத்தினரும் இந்த அறிகுறியுடன் வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் தலா 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-பிப்-202020:18:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni NAMMA நாட்டுலே சீனர்கள்போல பாம்பு பல்லி ஓணான் கரப்பாண்பூச்சி தவளைகளை திண்றதில்லே நான் வெஜ் திண்றவா எல்லாம் அது உண்மை இங்கே பல மைனஸ் கல் இருக்கே மக்கள் இருக்கும் 1சேரிகள் அவ்ளோகேவலமா அழுக்கா அசுத்தமா இருக்கே 2ஏழைகள் தான் என்றாலும் சுத்தமாக இருக்கப்டாதோ ???3ஒழுங்கா தினம் குளிப்பதும் இல்லே 3ஜீன்ஸ் என்றகான்ராவியைமாட்டிண்டு திரியும் இளசுகள் அவ்ளோகேவலமா இருக்குங்க 5அரிதாரம் பூசிண்டு (மெக்க பாம் அதுக்குப்பேரு)லிப்ஸ்டிக் ஈஷிண்டால் அழகிகள் என்று என்னம்வேறு .தெருவோராமலே விற்கும் அசுத்தமான பானிபூரி லொட்டு லொசுக்கெல்லாம் துணர்த்துக்களே கேரோனா மட்டும் இல்லீங்கப்பல தொற்று நோய்களும் வருமே
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-பிப்-202019:25:58 IST Report Abuse
கதிரழகன், SSLC கரோனா வைரஸ் வந்து பாத்துட்டு ஓடுச்சாமே "டே இங்கிட்டு திக, திமுக, அரபி அடிமை, வாடிகன் அடிமை ன்னு பெரிய பெரிய வைரஸ் எல்லாம் ரவுண்டு கட்டி அடிச்சுகிட்டு இருக்கு. இங்க வந்து மாட்டினா நம்பளை அழிச்சுடும், ஓடிலாண்டா," ன்னு ஓடிடுச்சாம். சீன கூட்டாளிங்க எல்லார் கிட்டையும் சொல்லிடுச்சாம். ஆயினால இங்க வராது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-பிப்-202015:26:58 IST Report Abuse
Endrum Indian 30 ஆம் இடத்தில் இருந்த நாம் எவ்வளவு வெகு வேகமாக முன்னேற்றம் அடைந்திருக்கின்றோம் 17 ஆவது இடத்திற்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X