'யாரு இந்த பொண்ணு இப்படி பாக்ஸிங் பண்ணுதேன்னு ஒரு முறை 'இறுதிச்சுற்று' பார்த்தவர்களை பல சுற்றுக்கள் பார்க்க வைத்து 'ஆண்டவன் கட்டளையில்' அதகளம் செய்து, 'சிவலிங்கா'வில் காதல் காட்சிகளில் கலக்கி, 'ஓ மை கடவுளே'யில் 'அனு' கேரக்டரில் முத்திரை பதித்து வரும் 'ரிட்ஸ் ரித்திகா' பேசுகிறார்..
உங்களை செல்லமாக எப்படி கூப்பிடுவார்கள்?
பிரண்ட்ஸ் எல்லாரும் 'ரிட்ஸ்'னு கூப்பிடுவாங்க. வீட்டில் 'ரித்து'னு கூப்பிடுவாங்க.
விளையாட்டு, சினிமா துறை எதில் முன்னேற விருப்பம்?
முடிஞ்ச வரைக்கும் இரு துறையிலும் முன்னேறணும். நேரம் கிடைக்கும் போது பாக்ஸிங் பயிற்சி எடுக்கிறேன். ஒரு முறை பிப்., 14ல் நடந்த தேசிய பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். இந்த ஆண்டு 'ஓ மை கடவுளே' பிப்., 14 ரிலீசாவது சந்தோஷமா இருக்கு.
'இறுதிச்சுற்று' மாதவன் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்?
'ஓ மை கடவுளே' டிரைலர் பார்த்து போன் பண்ணி நல்லா இருக்குனு சொன்னாரு, 'இறுதிச்சுற்று'ல் 'ரித்திகா உன்னால முடியும்'னு என்கரேஜ் பண்ணுவார். அடுத்து தனுஷ், இயக்குனர் சுதா படங்களில் நடிக்க விரும்புறேன்.
இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே...?
அதிக படங்கள் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிக்க நினைக்கிறேன். இயக்குனர், ஹீரோ யார், கதை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதால் நாலு வருஷத்தில் நாலு படம்மட்டும் நடிச்சிருக்கேன்.
'ஓ மை கடவுளே'ல் உங்கள் கேரக்டர் பெயர் என்ன?
படத்தில் என் கேரக்டர் பேரு அனு, ஹீரோ பேரு அர்ஜுன். சின்ன வயதில் இருந்து ரெண்டு பேரும் ஒன்னா வளர்ந்தவங்க. திடீர்னு ஹீரோவை பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்பேன்... மீதியை தியேட்டர்ல வந்து பாருங்களேன்...
பாக்ஸிங் மீது உங்களுக்கு வந்த ஆர்வம்?
அப்பா தான் அதுக்கு காரணம். அவர் தான் என் பயிற்சியாளர். என் தம்பியும் பாக்ஸிங் பண்ணுவாரு. பாக்ஸிங் என் ரத்தத்தில் கலந்து இருக்குன்னு சொல்லலாம்.
நடிப்பில் கஷ்டம் காதல் காட்சியா, டான்ஸ் காட்சியா?
ஹீரோவோட கெமிஸ்ட்ரி நல்லா இருந்தால் காதல், டான்ஸ் பண்றது கஷ்டம் இல்லை. சில நேரம் முதல் நாளே காதல் காட்சி வச்சிடுவாங்க. ஹீரோ பற்றி எதுவுமே தெரியாது எப்படி நெருக்கமாக காதல் காட்சிகளில் நடிக்கணும்னு குழப்பமாக இருக்கும். சில நாட்கள் பழகினால் செட்டாகும்.
தமிழ், ஹிந்தியில் விளையாட்டு சார்ந்த படங்கள் வருதே ?
நான் இனி பாக்ஸிங் படம் பண்ண மாட்டேன். கொஞ்சம் போர் அடிக்குது. பிற விளையாட்டு படமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். துப்பாக்கியும் கையுமாக ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசை.
நீங்க படப்பிடிப்பு தளங்களில் எப்படி இருப்பீங்க?
இயக்குனர் நல்லா பழகினால் துருதுருன்னு இருப்பேன். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் 'மைக்'கை வாங்கி 'பேக்கப்'னு சொன்னேன் எல்லாம் கிளம்பிட்டாங்க. அப்புறம் அவங்க கிட்ட கெஞ்சி கூட்டிட்டு வந்தேன். இயக்குனர் ஸ்ட்ரிக்ட்டா இருந்தால் கை கட்டி உட்கார்ந்திடுவேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE