அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்: முதல்வர்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (83)
Advertisement
CM, EPS, HydroCarbon, முதல்வர், இபிஎஸ், பழனிசாமி, ஹைட்ரோகார்பன், கால்நடை,

இந்த செய்தியை கேட்க

சேலம்: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் இ,பி,எஸ்., அறிவித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தரப்படாது எனவும் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.

இதன் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கால்நடை வளர்ப்பது அதிகம் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கறவை பசு மாடுகள் வழங்கும் திட்டத்தால் பயனாளிகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும். இதற்கான தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தேசிய அளவில் தமிழக அரசு விருது பெற்றது பிடிக்கவில்லை. திமுக ஆட்சியில் தான் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஹைட்ரோகார்படன், மீத்தேன் எடுக்க அனுமதி தந்தது திமுக தான். ஸ்டாலின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது. விவசாயிகளின் வேதனையை புரிந்து கொண்டு இதனை அறிவிக்கிறேன். நெடுவாசலில் பொய்ப்பிரசாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லி அரசியலில் ஆதாயம் தேட நினைக்கின்றனர். எதிர்கட்சிகள் எவ்வளவு அவதூறு செய்தாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியில்லை என முதல்வர் கூறியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், நடைபெறவிருக்கிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 'பல நாட்களாக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. இந்த அறிவிப்பால் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-202018:35:13 IST Report Abuse
Saleem தேர்தல் வருவதை மனதில் கொண்டு உருப்படியான அறிவிப்பு.. மிக்க மகிழ்ச்சி .... ஆனாலும் அடுத்த முறை ஜெயிக்க முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
10-பிப்-202011:30:40 IST Report Abuse
C.Elumalai விவசாயி எடப்பாடி வீசும் ஒவ்வொரு பந்தும்,கிளின்போல்டாக,அடிக்கதே சுடலைகான் க்கு. தீயமுக வில் தலைவர் குடும்பம் பரம்பரை தான் அரசியல் தெரிந்தவர்கள்,மற்றவர்கள் சும்மா பல்லக்கு தூக்கிகள். அதிமுகா விலோ கடை நிலை தொண்டனுக்கும்,அரசியல் ராஜதந்திரம்,தெரியும் என்பதை வெளி படுத்தியுள்ளார் எடப்பாடி. எடப்பாடியா கொக்கை? சூப்பர் முதல்வரே,துண்டு சீட்டு வயற்றில் மேலும் மேலும்,குண்டு போடுறிங்களே, அநியாயம் சார் இது.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
10-பிப்-202010:56:41 IST Report Abuse
 Sri,India நல்ல செய்தி . அடுத்த தலைமுறையும் விவசாயத்தை பார்க்கும் என்ற மகிழ்ச்சியான செய்தி இது . டெல்டா மட்டுமல்ல தென் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் . மழைநீரை தன்னுள் சேகரித்து மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் பெருக்கி உணவுத்தேவையையும் பூர்த்தி செய்யும் வேளாண் தொழில் பாதிக்கப்பட வேண்டிய தொழில் . விவசாயம் இல்லாமல் போனால் உலகமே சுடுகாடாகி விடும் . கொரானா வைரஸ் தேவை இல்லை ...விவசாயத்தை அழித்தாலே போதும்,நாடு சுடுகாடு தான் என்ற உண்மையை மத்திய அரசு ,மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X