அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜய்க்கு எதிராக போராட்டமா? எச்.ராஜா மறுப்பு

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (42)
Advertisement
HRaja, ActorVijay, Master, Raja, BJP, vijay, ITraid, blackmoney, CAA, stalin, dmk, seeman, எச்.ராஜா, ஹெச்.ராஜா, ஐடிரெய்டு, வருமானவரித்துறை சோதனை, நடிகர்விஜய், விஜய், கறுப்புபணம், குடியுரிமை சட்டம், குடியுரிமை திருத்தசட்டம், சீமான், திமுக,

இந்த செய்தியை கேட்க

மதுரை: நடிகர் விஜய்க்கு எதிராக பா.ஜ., போராட்டம் நடத்தவில்லை என பா.ஜ., தேசிய பொது செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படப்பிடிப்பு, நடந்தது. பாதுகாக்கப்பட்ட இடமான இச்சுரங்கத்தில், படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி., அதிகாரிகளிடம், 'பாதுகாக்கப்பட்ட இடமான, சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது எப்படி? படப்பிடிப்பு நடத்த, தொடர்ந்து அனுமதித்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனக் கூறி, கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: நடிகர் விஜய்க்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. படப்பிடிப்பை நெய்வேலி சுரங்கத்தில் நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம். விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு பா.ஜ., காரணமில்லை. சினிமா துறையில் கறுப்பு பணம் புழங்குவது அனைவருக்கும் தெரியும்.




தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களை ஊக்குவிக்கின்றனர். பாதிரியார்களை நிர்பந்தப்படுத்தி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர். சிவ வழிபாட்டை கேலி செய்த சீமான், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சென்றது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-பிப்-202013:13:08 IST Report Abuse
PANDA PANDI கருப்பு வெள்ளை சம்பந்தமே இல்லாம உளறுவதன் மூலம், நீங்கள் வாழ்கை விரக்த்யில் உள்ளீர் என்று தெரிகிறது. உடனே விரக்தியோலஜி dr. h. ரஸா வை தொடர்புகொள்ளவும்..
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
10-பிப்-202011:59:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         உண்மையில் இவன் சுத்த வீரன் என்றால் தைரியம் இருந்தால் இவன் சொல்லும் தொகுதியில் இவன் நிற்க சொல்லுவோம் இவனை எதிர்த்து விஜய் நிற்கட்டும் பாப்போம் யார் வெற்றி என்று இவன் ஒரு சின்ன பயன் விஜய் எதிரில் கிணற்று தவளை மாதிரி இங்கே அடிமைகள் ஆட்சி என்பதால் இவன் துள்ளுகிறான் ஏன் ஜெயா இருக்கும்போது இவன் யார் என்றே தெரியாதே இப்போ எப்படி முலைச்சான் இவனை முளையிலேயே கிள்ளி எரியனும்
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
10-பிப்-202011:10:30 IST Report Abuse
Visu Iyer வழிபாட்டை கிண்டல் செய்பவர்கள் கோவிலுக்கு போக கூடாது என எந்த சட்டமும் இல்லை.. சில அடிப்படைகளை தெரியாமல் சிலர் உளருகின்றனர் .. அவர்களை புத்தி உள்ளவர்கள் பொருட்படுத்துவதில்லை என்பது சிலருக்கு புரியாது.. இவர்களை ஒதுக்கியே வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X