சீனாவில் மகளை அணைக்க முடியாமல் தவித்த தாய்: வீடியோ வைரல்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (21)
Advertisement
coronavirus, சீனா, கொரோனாவைரஸ், வீடியோ,

இந்த செய்தியை கேட்க

பெய்ஜிங்: சீனாவில், கொரோனா வைரஸ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு நர்ஸ், தனது மகளிடம் தூரத்தில் இருந்து அணைத்து கொள்வது போல் கைகளை விரித்து பிரியாவிடை அளித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பலி எண்ணிக்கை 803ஐ தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீன அரசு செய்தி மீடியாவான ஷினுவா, டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை ஒன்றின் வெளியே, பாதுகாப்பு உடைகள், முகமூடி அணிந்து கொண்டு நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் அவரது மகள் நிற்கிறார்.
அப்போது, மகள் அழுது கொண்டே, "அம்மா நான் உங்களை இழந்து வாடுகிறேன், சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள்" எனக்கூறுகிறார்.




அதற்கு நர்ஸ, அம்மா பெரிய அரக்கனை எதிர்த்து போராடுகிறேன். வைரசை தோற்கடித்த பின்னர் வீடு வந்து சேர்வேன் என்றார். தொடர்ந்து, தனது கையை தூக்கி அணைப்பது போல் சைகை செய்தார். பதிலுக்கு, சற்று தொலைவில் இருந்த மகளும் அவ்வாறே செய்தார்.

பின்னர், மகள் கொண்டிருந்த பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு, அழுதபடியே சென்றார். பின்னர், அந்த நர்ஸ் வந்து, அதனை எடுத்து கொண்டு கையசைத்தபடி சென்றார். இதனை, சற்று தொலைவில் இருந்து சிறுமி அழுதபடியே பார்த்து கொண்டு நின்றார்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏராளமானோர், உருக்கமாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202005:41:53 IST Report Abuse
துளசி இவனுகளுக்கு காவி நிறம் பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வராது
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
09-பிப்-202019:27:43 IST Report Abuse
 N.Purushothaman சீன வரலாற்றில் இந்த வைரஸ் மற்றொரு இருண்ட பக்கங்களை உருவாக்கி விட்டு விட்டது ...இந்திய அரசு உதவ முன் வந்துள்ளதை சீன அரசு பயன்படுத்திக்கொண்டு சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் ...இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம் ...
Rate this:
Share this comment
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-202018:41:57 IST Report Abuse
ana ஒரு செவிலியாராய் பெருமை படுகிறேன் என்னே உங்கள் கடமை நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X