அண்டார்டிகாவில் அதிகரிக்கும் வெப்பம்: உருகும் பனியால் அழிவு பாதையில் உலகம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெனிவா: அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, 18.3 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், கடல் நீர் மட்டம் விரைவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.latest tamil news
அர்ஜென்டினாவில் உள்ள 'எஸ்பெரான்சா' என்ற ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'அண்டார்டிகாவில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம், 17.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இதுவே, அன்டார்டிகாவில் பதிவான அதிக வெப்பநிலையாக இருந்தது. இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் வகையில், கடந்த 6ம் தேதி, 18.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது' என, தெரிவித்துள்ளது.


latest tamil news
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், உலக வானிலை ஆய்வு நிறுவன செய்தி தொடர்பாளர் கிளர் நல்லிஸ் கூறியதாவது:அண்டார்டிகாவில் வெயில் காலத்தில் கூட, இந்த அளவு வெப்பம் பதிவாகாது. கடந்த, 50 ஆண்டுகளில், அன்டார்டிகாவில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், அண்டார்டிகாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள, 87 சதவீத பனிப்பாறைகள் உருகியுள்ளன.அதிக அளவில் பனிப்பாறைகள் உருக, புவி வெப்பமயமாதல் தான் காரணமாக உள்ளது. பனிப்பாறை உருகுவதால், நுாறு ஆண்டில் கடல் மட்டம் 10 அடி உயரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


latest tamil news
அண்டார்டிக் பனிப் படுகையில், 1979ல் இருந்து, 2017 வரையிலான ஆண்டுகளில் பனி உருகுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தளவு கூடுதலாக பனி உருகினால், கடல் மட்டம் விரைவில் உயரும். கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
10-பிப்-202013:14:09 IST Report Abuse
Kundalakesi உடனடியாக இதை அரசும் மக்களும் புரிந்து கொண்டு, முடிந்த வரையில் மாசு வெளிப்பாட்டை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் குளிர்சாதனம் பிரிட்ஜ் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். பசுமை வாயு வரி ஒவ்வொரு பசுமை வாயு பொருட்கள் விற்பனையில் 100 சதவிகிதம் போட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் இதன் முக்கியத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். எல்லாரும் AC, Fridge, Car, Bike, Diesel SUV's உபயோகப்படுத்தினால் யாரு மாசை குறைப்பது? இப்பொழுதே வெய்யில் சுட்டெரிக்கிறது. எதிர்காலத்தில் உலகமே வாழ தகுதி இல்லாத பாலைவனமாக மாறிவிடும்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
09-பிப்-202022:25:47 IST Report Abuse
m.viswanathan தமிழகம் முதலில் அழியுமா
Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
10-பிப்-202004:51:58 IST Report Abuse
Palanisamy Tஅதிக வெப்பத்தின் காரணமாக பணிக் கட்டிகள் உருகும். கடல் நீற்றின் அளவு உயரும். இதன் விளைவால் பல இடங்களில் நடப்பதுப் போன்று சென்னை மாநகரமும் கடலில் மூழ்கும் அபாயம். எல்லாமே வளர்ச்சியென்றக் கண்ணோட்டத்தில் நடக்கும் அவலங்கள். சுற்றுச் சுழல்கள் நீர்நிலைகளை அழித்தல் காற்றின் தூய்மைக் கேட்டால் பூமியைச் சுற்றியுள்ள "oozone layer என்றுச் சொல்லக் கூடிய பாதுகாப்புக் கவசம் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலுமாகப் அழிந்துப் போகும் நிலை. இதன் விளைவு வெப்பம் அதிகரித்தல். இதில் பல நாடுகள் போன்று அமெரிக்கா சீனா இந்தியாவிற்கும் நிறையப் பங்குண்டு. இதெல்லாம் நமக்கு முக்கியமா எப்படிப் பார்த்தாலும் பெரிய வளர்ச்சிதான் முக்கியம். அது வந்தப் பின்பு தான் தெரியும். இந்தியாவின் எந்த இந்தப் பகுதிகள் கடலில் மூழ்கிப் போகுமென்று. இனிமேலாவது நல்லது நடக்கட்டும்....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-பிப்-202021:07:52 IST Report Abuse
Natarajan Ramanathan தென்துருவம் அண்டார்டிகாவில் இப்போது கோடைகாலம்தான். ஆனாலும் 18+ டிகிரி என்பது மிகவும் ஆபத்தான அளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X