ஆம்ஆத்மியுடன் கூட்டணியா?: காங்., எம்பி பதில்| Dinamalar

ஆம்ஆத்மியுடன் கூட்டணியா?: காங்., எம்பி பதில்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (14)
Share
DelhiElection2020, Poll, AAP, Congress, Results, DelhiResults, AamAadmi, MP, Chacko, டில்லி, தேர்தல், முடிவுகள், ஆம்ஆத்மி, காங்கிரஸ், கூட்டணி, எம்பி, சாக்கோ

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது பற்றி தேர்தல் முடிவை பொறுத்தே சொல்ல முடியும் என காங்., எம்பி பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் நேற்று (பிப்.,08) நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த புள்ளி விபரங்கள், நேற்று மாலை 4 முதல் 5 மணி வரை மட்டுமே எடுத்தது என்றும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நேரங்களில் மக்கள் மாற்றி ஓட்டளித்து இருக்கலாம் என்றும் பாஜ., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், டில்லியில் நிச்சயம் பாஜ., ஆட்சியமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


latest tamil news



பாஜ.,வின் இந்த கருத்தால், பிப்.,11ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கேரளா மாநிலம், திரிசூர் தொகுதி காங்., எம்பி பி.சி.சாக்கோ கூறுகையில், டில்லியில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பு என்பது தேர்தல் முடிவை பொறுத்தது. முடிவுகள் வெளிவந்த பின்னரே அது பற்றி விவாதிக்க முடியும். கருத்துக்கணிப்புகள் சரியாக இல்லை என நினைக்கிறேன். இதனால், கணித்ததை விட காங்., சிறப்பான வெற்றி பெறும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X