அரசியல் செய்தி

தமிழ்நாடு

திட்டினாலும் சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்போம்: அமைச்சர் உதயகுமார்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (39)
Advertisement
Minister, UdhayaKumar, Vote, RB_UdhayaKumar, TollGate, அமைச்சர், உதயகுமார், சுங்கச்சாவடி, ஓட்டு, கப்பலூர், வருவாயத்துறை

இந்த செய்தியை கேட்க

மதுரை: ஓட்டுக்கேட்கும் போது, வாக்காளர்கள் திட்டினாலும், சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்போம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் பிரச்னையை தீர்ப்பதற்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் தனது வாக்குகள் பாதிக்கப்படுகிறது. சுங்கச்சாவடி பிரச்னைக்கு நான் தான் காரணம் என சிலர் கொளுத்திப் போட்டு விடுகின்றனர். ஓட்டு கேட்கும் போது பாதி பேர் சிரிக்க கூட மாட்டார்கள். ஆனாலும், நாங்கள் கும்பிட்டுக்கொண்டே தான் இருப்போம்.




வாக்காளர்கள் திட்டினாலும், சிரித்தபடியே ஓட்டு கேட்போம். அவர்கள் என்ன சொன்னாலும், கோபப்படாமல், மானம், வெட்கம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்போம். அதுபோல, சுங்கச்சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகன ஓட்டிகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்காமல் சகோதரர்களாக நினைத்து விதிமுறைகளை பின்பற்றி, மென்மையாக அணுக வேண்டும். அப்படி செய்தால் எந்த பிரச்னையும் வராது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-202018:38:28 IST Report Abuse
Saleem துப்பினால் துடைத்து கொள்வார் .... இந்த கட்சியில் இது ஒன்றும் புதிதல்ல .... ஜெயலலிதா என்ற ஒன் மேன்ஷோ ...முடிந்தது .. முடித்தார்கள் ... இனி இந்த கட்சியில் மனமுள்ளவர்கள் யாரும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
10-பிப்-202013:53:20 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...........
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
10-பிப்-202013:29:16 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan வெட்கம் மானம் சூடு சொரணை விட்டு விட்டு தானே அரசியலுக்கு வந்துள்ளோம் என்பதை இதை விட தெளிவாக கூற முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X