ஜூனியர் உலககோப்பை பைனல்: இந்திய அணி 177 ரன்கள்

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement
U19WorldCup, U19CWCFinal, INDvBAN, U19, WorldCup, Final, India, Bangladesh, உலககோப்பை, இந்தியா, வங்கதேசம், பைனல்

இந்த செய்தியை கேட்க

போட்செப்ஸ்ட்ரூம்: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை (19 வயது) பைனலில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணிக்கு திவ்யான்ஷ் சக்சேனா (2) மோசமான துவக்கம் தந்தார். பின் இணைந்த ஜெய்ஸ்வால், திலக் வர்மா நிதானமாக ரன் சேர்த்தனர்.




பொறுப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதமடித்தார். திலக் வர்மா 38 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பிரியம் கார்க் (7) ஏமாற்றினார். ஜெய்ஸ்வால் 88 ரன்னில் 'பெவிலியன்' திரும்பினார். சித்தேஷ் வீர் (0) நிலைக்கவில்லை. ஜூரெல் (22) சோபிக்கவில்லை. மற்றவர்கள் ஏமாற்ற இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - ,
09-பிப்-202022:47:42 IST Report Abuse
Mohan பொருப்பற்ற Batting இந்தியா தோற்றதட்கு காரணமாக அமைந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X