ஓட்டுசதவீதம் எங்கே? கெஜ்ரிவால் அதிர்ச்சி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (34)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் தேர்தல் முடிந்து இவ்வளவு மணி நேரமாகியும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இதில், 61 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்ததாக கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உண்மையாகவே அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து கொண்டிருக்கிறது? தேர்தல் முடிந்து பல மணிநேரம் ஆன பின்பும், இன்னும் தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை வெளியிடாதது ஏன்?. இவ்வாறு அவர் டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.


மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்


இதற்கிடையே ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், ரிசர்வ் படைகள் யாரும் இல்லாமல், பாபர்பூர் சட்டசபை தொகுதியில் உள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கிறது என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஓட்டெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு இயந்திரங்களும் கணக்கிடப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் அங்கீகரிக்கப்படாத வகையில் இயந்திரங்களை எடுத்துச் செல்ல அதிகாரிகள் முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-பிப்-202018:52:44 IST Report Abuse
Poongavoor Raghupathy All Political Parties must learn a lesson from Jayalalitha and Kesariwal. Throw away freebies to people before election and your Party is sure to win. Nowadays people want to have free water, electricity, Medicines,Bus travel etc for giving votes They are not interested to get money for votes which is one time but long term freebies. Kesariwal is intelligent like Jayalalitha and this lesson is useful useful for Congress also and they have to give freebies before election and not after election.Money through freebies of essentials can make voters to vote for freebie giver. Hats of to Kesariwal for giving free bus travel to all women of Delhi irrespective of whether rich or poor. Can Kesariwal continue with freebies for a long time time alone will tell us. With Jayalalitha's freebies Tamilnadu Govt is in a debt of more than 4 lakh crores in spite of high revenue of Liquor sales. We will have to wait for Kesariwal's Govt how much debt is going to be left with Delhi UT.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-பிப்-202016:11:55 IST Report Abuse
madhavan rajan எதோ ஜெயிச்சமா. ஏதாவது பொய் சொல்லி ஆட்சியை நடத்தினோமான்னு இருக்கணும். ஒட்டு சதவீதமெல்லாம் கேக்கப்படாது. இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டு.
Rate this:
Share this comment
Cancel
Hari - chennai,இந்தியா
12-பிப்-202012:37:04 IST Report Abuse
Hari ஏண்டா ஜெயித்தாலும் பொலம்பறீங்க தோத்தாலும் பொலம்பறீங்க உங்களால் இனி டெல்லி மக்கள் இலவசமாக எலேக்ட்டிர்சிட்டி ,பஸ் பாஸ் ,இலவசமாக அனுபவிக்கலாம் ,அதன் கடன் சுமையை யார் அனுபவிப்பார்கள் போலீசையும் ,கார்பொரேஷனையும் கெஜ்ரி வாழிடம் ஒப்படைக்கணும் அப்போ தெரியும் சம்பளம் இவர்களால் எப்படி கொடுக்க முடியும்னு.இப்போது மத்திய அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்குது.பாண்டிச்சேரி தன அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறது அதே நிலை விரைவில் டெல்கி மக்களுக்கும் அரசுக்கும் வரும்.அப்போது பார்க்கலாம் கேஜ்ரிவாலா,டெல்லி மக்களானு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X