ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 138 இந்தியர்கள் நிலை என்ன?| Dinamalar

ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 138 இந்தியர்கள் நிலை என்ன?

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Share

இந்த செய்தியை கேட்க

டோக்கியோ: ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை பிப்., 5-ம் தேதி வந்தடைந்தது.latest tamil newsகப்பலில் பணியாளர்கள் உட்பட, 3,700 பேர் உள்ளனர். கப்பலில் பயணித்த, 70 வயதான முதியவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து யோகோமாகா துறைமுகத்தில் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டது.
முதற்கட்டமாக, 279 பேருக்கு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 61 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள், கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்னும் 12 நாட்களாகும்!


'மீதமுள்ளவர்களுக்கு, 3,400 பேருக்கு, கொரோனா வைரஸ் குறித்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, இன்னும் 12 நாள்களாகும். அதுவரை அவர்கள் அனைவரும், கப்பலிலேயே தங்க வைக்கப்படுவர். கப்பலில் உள்ளவர்களில், 138 பேர் இந்தியர்கள். அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை' என, துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் உள்ளவர்களின் நிலை குறித்து, அனைவரும் கவலையடைந்துள்ள நிலையில், கப்பலில் உள்ள பயணி ஒருவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 'என் அறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டு பயணி ஒருவர் கடுமையான இருமலால் அவதிப்பட்டு வருகிறார். கப்பல் ஊழியர்கள் ஒவ்வொரு அறைக்கும் வந்து உணவு கொடுத்து செல்கிறார்கள். இன்றோ, நாளையோ நானும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவேன்' என, அச்சம் தெரிவித்துள்ளார்.


latest tamil news
டுவிட்டரில் நம்பிக்கை


கப்பலில் இருக்கும் யார்ட்லீ யாங் என்ற பெண் பயணி, 'நாங்கள் 5 நாள்களாக இந்தக் கப்பலில் இருக்கிறோம். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தற்போது கப்பலில் ஏராளமான மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என, நம்பிக்கை அளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கப்பலில் தங்கவைக்கப்பட்டுள்ள, 3,400 பேரும் நோய் பாதிப்பின்றி மீள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


தொடர்பு கொள்ள


+81 3 3261 8089 என்ற தொலைபேசி எண்ணிலும் falcons.tokya@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொண்டு கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலையை அறிந்துகொள்ளலாம்' என, ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X