பெண்கள் பாதுகாப்பிற்காக 'திசா' சட்டம் ; ஜெகன் மோகன் துவக்கம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (8)
Advertisement

ஐதராபாத் : ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா என்ற புதிய சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். அதன்படி இன்று திசா போலீஸ் ஸ்டேஷனையும், திசா செயலியையும் துவக்கி வைத்தார்.


ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளும் ஆங்காங்கே நடந்துகொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆந்திர சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 'திசா' சட்டத்தை நிறைவேற்றினார். இதற்காக மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களின் திசா பெயரில் தனி போலீஸ் ஸ்டேஷன், தனி நீதிமன்ற அமைப்பு துவங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (பிப்., 9) கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, திசா போலீஸ் ஸ்டேஷனையும், திசா செயலியையும் துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஆந்திராவில் தற்போது 18 திசா போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருத்திகா சுக்லா, ஐ.பி.எஸ். அதிகாரி தீபிகாவை அரசாங்கம் பிரத்தியேக அதிகாரிகளாக நியமித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கொண்டு வந்த திசா சட்டத்தை டில்லி மற்றும் மஹாராஷ்டிர அரசுகளும் அமல்படுத்தப் போவதாக கூறிவருகிறது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான கொடுமைகளை எதிர்த்து போராடவும் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும், திசா போன்ற சட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-202009:28:35 IST Report Abuse
Saleem "வாழ்த்துக்கள் திரு ஜெகன் அவர்களே '''' அதிரடி நாயகனாக வலம் வருகிறார், தமிழ் நாடு அரசியல் வாதிகள் இவரின் ஆட்சி முறையை பார்க்கிறார்களா இல்லையா ...... தமிழ் நாட்டுக்கும் இப்படி முதல்வர் வேண்டும்.
Rate this:
Share this comment
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-பிப்-202015:08:48 IST Report Abuse
Dr. Suriyaஇத எப்போவோ அம்மா ஆட்சியில் மகளீர் காவல் நிலையம் மகளீர் நீதிமன்றம்னு கொண்டு வந்துட்டாங்க .......
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202008:51:16 IST Report Abuse
Jagan Mohan Reddy I appreciate you ( Corrupt) Jagan! I would suggest you to give back the money, you have stolen from people.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-பிப்-202002:31:03 IST Report Abuse
மலரின் மகள் Sirappu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X