பாலஸ்தீனம் மீதான ஒடுக்குமுறை ; மலேசிய பிரதமர் எச்சரிக்கை

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (80)
Share
Advertisement

கோலாலம்பூர் : பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை கண்டும் மலேசியா இனியும் அமைதி காக்காது என மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.latest tamil newsஉலகில் உள்ள பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பார்லி.,யின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் பேசுகையில், நாங்கள் எப்போதும் கடமை உணர்வுடன் செயல்படுகிறோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று கூறும் பலம் பொருந்திய நாடுகள், குற்றங்கள் நடக்கும் போது அவற்றை கண்டு அமைதி காப்பது போன்ற வழக்கத்தை பின்பற்றும்போது நமது கடமை அதிகரிக்கிறது. கடந்த ஜன.,7 ல் புதிய குடியிருப்பு பணிகளுக்கான கட்டுமான பணிக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்தது. இதை குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ளது. வேறொரு நாட்டிற்குச் சொந்தமான நிலப்பகுதியில் குடியிருப்புகளை நிர்மாணித்து அது தங்களுடைய பகுதி எனச் சொந்தம் கொண்டாடும் இந்த வழக்கம் உலகின் வேறு எந்த நாட்டின் வரலாற்றிலும் காணப்படாத ஒன்று.

தொடர்ந்து இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். யூனிசெப் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் பாலத்தீன குழந்தைகளுக்கு எதிரான இஸ்ரேலின் அத்துமீறல்கள் குறித்தும், இஸ்ரேல் ராணுவ நீதிமன்றங்களால் பாலஸ்தீன குழந்தைகள் தண்டிக்கப்படுவது குறித்தும் நீண்டகாலமாக ஆவணப்படுத்தி வந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்படும் பாலஸ்தீன குழந்தைகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனத்தால் சிறைபிடிக்கப்படும் தங்கள் வீரர்களை இஸ்ரேல் விடுவித்துக் கொள்வது கண்கூடாகத் தெரிகிறது. இவை அனைத்துக்காகவும் இஸ்ரேல் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.


latest tamil newsபாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது. அவ்வாறு அமைதி காத்தால் இஸ்ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
11-பிப்-202009:51:33 IST Report Abuse
Hari ஹாஹாஹா மலேயாவில் ஒரு நவீன சுடலை ,சாகும்போது சங்கரா சங்கறான்னு சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை என எங்க வூரில் ஒரு பழமொழி உண்டு .மகாதீருக்கு 96 வயதாகிறது இப்போது .மலேயாவை உலகநாடுகளின் காவலனாக இவரால் மாற்ற முடியுமா .வெளியில் சென்ற ஓணானை (ஜாகிர் நாயக்) வேட்டிக்குள்ள புடிச்சு விட்டுக்கிட்டு இவறுபடும் பாடு வருங்கால மலேயாவை அழித்துவிடும்..
Rate this:
Cancel
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
10-பிப்-202017:13:17 IST Report Abuse
Selvaraj Chinniah உள்நாட்டு செயல் முறைகளை இவரால் சரிசெய்ய முடியவில்லை.சாத்தன் வேதம் ஓதுவது போல, மற்ற நாட்டு உள் விவகாரங்களில் தலையிட இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தீவிரவாத கும்பலை ஆதரிப்பது,அடைக்கலம் கொடுப்பது போன்ற புண்ணிய காரியங்களின் ஒட்டுமொத்த குத்தைகைதாரர் இவர்தானோ
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-பிப்-202012:30:16 IST Report Abuse
Malick Raja ஒரு நாட்டில் ஒரு பிரச்சினை அதற்க்கு வேறொரு நாட்டின் தலைவர் எதிர்க்கிறார் அது இருநாடுகளின் சம்பந்தப்பட்டது அதை இரு நாடுகளுமோ அல்லது மற்றநாடுகளோ பார்க்கட்டும் .. அதற்கு கண்ட கண்ட வனவிலங்குகளின் அறியவுகொண்ட மனிதர்களின் கருத்தால் ஒன்றும் நடக்காது எப்படி என்றால் சூரியனை பார்த்துநாய்கள்ககுரைப்பதற்கு சமமாகும் என்பதன் அறியாததன் விளைவு என்பதும் சரிதானே ...
Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
10-பிப்-202013:16:52 IST Report Abuse
Azhagan Azhaganபாய்க்கு பாய் தானே முட்டு கொடுக்கணும். இவரு இந்தியாகிட்டே வாங்குன அடியே இன்னும் ஆறலை. இஸ்ரேல் இந்திய மாதிரி கெடயாது ரொம்ப பொங்கவேண்டாம் மகாதீர் அவர்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X