சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ரஜினிக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 ரஜினிக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!

எம்.சீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இலங்கை அகதிகளுக்கு பாதிப்பே வராது; அரசியல் கட்சியினர் பேச்சுக்களை நம்பி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஒரு வேளை மாணவர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தில் சந்கேகம் இருந்தால், பேராசிரியர்களை கேட்டு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, 'இந்நாட்டில் வசிக்கும், ஒவ்வோர் இஸ்லாமியரும் இந்தியரே' என, பிரதமர் மோடி குறிப்பிட்டதை நினைவுபடுத்தியுள்ளார். ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'குடியுரிமை திருத்த சட்டத்தால், என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என, ஆராய்ந்து, சிந்தித்து, நடிகர் ரஜினி பதில் கூற வேண்டும்' என, தி.மு.க, தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

சேலத்தில் நடந்த, 'துக்ளக்' வார பத்திரிகை ஆண்டு விழாவில், 1971ல், தி.க., கட்சியினர் ராமர் மற்றும் சீதை சிலைகளை அவமானப்படுத்தியதாக ரஜினி பேசினார். அதற்கு, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களும் ரஜினியின் பேச்சை கண்டித்தனர். ஒரு சிலர் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

இத்தருணத்தில், குடியுரிமை விஷயம் குறித்து, ரஜினி பேச்சுக்கு, தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க் கொடி ஏந்தியுள்ளன. தி.மு.க, தலைவர் ஸ்டாலின் அவர்களே... குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை, இதுவரை தெளிவாக, நீங்களே கூறவில்லை. ஒருசில பிரிவு மக்களை திசை திருப்ப பார்க்கிறீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படித்து கருத்து கூறுங்கள். அதை விட்டு, இப்படி மக்களை துாண்டி விடும் அளவிற்கு, நீங்கள் துணை போகாதீர்கள். சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிக்கு, நீங்கள் அறிவுரை கூற தேவையில்லை!

இப்படி செய்தால் 'கோமாரி' நோயை விரட்ட முடியும்!

கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவையிலிருந்து எழுதுகிறார்: இந்தாண்டு, மத்திய அரசின் பட்ஜெட்டில், வேளாண்மைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது, வரவேற்கக்கூடியது.

இந்திய மண்ணிலிருந்து, ௨௦௨௫க்குள், 'கோமாரி' நோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நல்ல செய்தி கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாட்டிலிருந்த, 'வெக்கை' நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.அப்போது, கையாண்ட நடவடிக்கைகளை கோமாரி ஒழிப்பிலும், அரசுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கடன், மானியம் வழங்குவதில் துவங்கி, 'சோலார் பேனல்' வாயிலாக கிடைக்கும் மின்சாரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளடக்கியது, பாராட்டத்தக்கது.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கும் பட்ஜெட்டில், 'தனி கவனம்' செலுத்தப்பட்டு உள்ளது. விவசாயத்திற்கு இணையான லாபம், கால்நடை வளர்ப்பின் வாயிலாக கிடைக்கிறது. பசுக்களின் சினை பிறப்பு சதவீதம் அதிகரித்தால், பால் உற்பத்தியும் பெருகும்.அதற்கு, மாநில அரசுகள் கால்நடை பராமரிப்புக்காக, கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். கால்நடைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

வெக்கை' நோயை ஒழித்தது போன்று, 'கோமாரி' நோயை தடுக்க, தடுப்பூசி குழுக்கள், சிறப்பு குழுக்கள், 'செக்போஸ்ட்' குழுக்கள் உருவாக்க வேண்டும். தடுப்பூசி போடுவதை இன்றியமையாத கடமையாக, கால்நடை வளர்ப்போர் கற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை, அரசு மேலும் அதிகரிக்க வேண்டும். பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, ௨௦௨௫ம் ஆண்டில், கால்நடைகளை தாக்கி, அதிக சேதத்தை ஏற்படுத்தும், 'கோமாரி' நோயை நாட்டிலிருந்து விரட்ட முடியும்!

இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மனிதநேயமற்ற செயல்!

என்.உமா தாணு, பொதுச்செயலர், மனிதநேய பேரவை, கோவையிலிருந்து எழுதுகிறார்: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரும், பணி நிறைவு செய்த ஓய்வூதியர்களும், பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ செலவுகளை, இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஏற்றுக் கொள்ளும் என்ற அடிப்படையில், சந்தாதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் சந்தாவாக, இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வசூலித்து, ஆண்டுதோறும் ஊழியர்களால் வழங்கப்படுகிறது. ஆனால், சந்தாதாரர்களின் மருத்துவச் செலவுகளை, ஏதாவது மிக சாதாரண காரணங்களைக் கூறி, தட்டி கழிக்கின்றன, இன்சூரன்ஸ் கம்பெனிகள்.இது தொடர்பாக, சந்தாதாரர்கள் எவ்வளவு கடிதம் எழுதினாலும், பாராமுகமாக இருந்து விடுகின்றனர். 'ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும்' என, கட்டாயப்படுத்துகின்றனர்; இது மனிதநேயமற்ற செயல்.

கிராமப்புறங்களில் வாழும் ஓய்வூதியோரும், ஊழியர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட இவர்களிடமிருந்து ஆண்டுதோறும் கோடி கோடியாக சந்தா வசூல் செய்யும், இன்சூரன்ஸ் கம்பெனிகள், அவர்கள் மருத்துவச் செலவைக்கூட வழங்காமல் இருப்பது, கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களால், மருத்துவச் செலவுகளுக்காக, இன்சூரன்ஸ் கம்பெனிகளில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டோர் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்சூரன்ஸ் கம்பெனிகளின் குறைபாடுகளை களைய, உறுப்பினர்களுக்கு நியாயம் கிடைக்க, உரிய ஒழுங்குப்படுத்தும் ஆணைகளை, மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவச் செலவுகளை உரிய ஆவணங்கள் கொடுத்தால், உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் கம்பெனிகளின், வரவு - செலவு கணக்குகளை, ஆண்டு தோறும் தணிக்கை செய்ய வேண்டும்; இதனால், முறைகேடுகள் தடுக்கப்படும்.குறைகளை மேல்முறையீடு செய்தால், உரிய முறையில் சரியான பதில்களை உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அறிவுரை, பதில் அனைத்தும், அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-பிப்-202011:18:12 IST Report Abuse
Visu Iyer அறிவு உள்ளவர்களுக்கு தானே அறிவுரை சொல்ல வேண்டும்.. மற்றவர்களுக்கு அதை சொல்ல தேவையில்லலை... தானே..
Rate this:
Share this comment
Cancel
Thomas - Al Khor,கத்தார்
10-பிப்-202010:20:12 IST Report Abuse
Thomas ஆமா ஒழுங்கா வாடகை, வேலையாளுகளுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்காதவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்லி ஒரு பயனும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202007:51:52 IST Report Abuse
மோகன் சுடலை ஒரு நாறவாயன். அவன் சொல்லுவதை பெரிதாக எடுத்து கொள்ள கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X