சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
'டவுட்' தனபாலு

பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கடலுார் மாவட்டம் நெய்வேலியில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதால் தான், நடிகர் விஜய் படப்பிடிப்பில், பா.ஜ.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். 'டவுட்' தனபாலு: பாதுகாக்கப்பட்ட பகுதிக்கே, பா.ஜ,.வினர் பாதுகாப்பு அளிக்கின்றனரா என்ற, 'டவுட்' முதலில் ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியை பாதுகாப்பது, பாதுகாப்பு படையினர் கடமை; அதில், பா.ஜ.,வுக்கு என்ன வேலை என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பலரை, ஆறு மாதங்களுக்கும் மேலாக, வீட்டுக்காவலில் மத்திய அரசு வைத்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்; அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: இப்படித் தான், பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லாவை, அப்போதைய காங்., அரசு, 11 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது. அதை எதிர்த்து ஒன்றிரண்டு முறை அறிக்கை விடுத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஷேக் அப்துல்லாவை, காஷ்மீர் சிங்கம் என்றும், அவரை விடுவிக்க கடும் பாடுபட்டேன் என்றும் பின்னர் கூறி, அரசியல் லாபம் அடைய முயன்றார். அதுபோல, நீங்களும் முயற்சிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என தெரியவில்லை. அவர் ஒரு பக்திமான். அவர் கூறியவை, அவரின் சொந்த கருத்துகள். அதற்கும், அ.தி.மு.க.,வுக்கும் சம்பந்தமில்லை. இது தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் பல முறை தெளிவுபடுத்தியுள்ளார்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது, ஜெ., இருந்த போது அறவே இல்லாத, உள்கட்சி ஜனநாயகம், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் வெளிப்படையாக பேசுவது, தங்கள் சொந்த கருத்துகளை தெரிவிப்பது இப்போது தான் நிலவுகிறது என்பது, 'டவுட்' இல்லாமல், அனைவருக்கும் தெரிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைகளில் விதவிதமான நிறங்களில், சாமி கயிறு கட்டியுள்ளதை வைத்து, அவரை பக்திமான் என்கிறீர்கள் என்பது மட்டும், டவுட்டே இல்லாமல் தெரிகிறது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-பிப்-202019:40:33 IST Report Abuse
D.Ambujavalli இப்படித்தான் யார் எங்கெங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் ‘பாதுகாப்பு’ கொடுப்பீர்களோ? ரா.பாலாஜியின் நாக்கு அவிழ்த்தப்பட்ட, அறுத்துவிட்ட ஒன்று, கண்டபடி சுற்றும்
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
10-பிப்-202018:45:45 IST Report Abuse
karutthu அதிமுக விற்கு சம்பந்தமில்லாத ஒரு கருத்தை எப்படி ஒரு அதிமுக அமைச்சர் கூறலாம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X