இதே நாளில் அன்று

Added : பிப் 09, 2020
Advertisement
 இதே நாளில் அன்று


பிப்ரவரி, 10, 1945காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ராஜேஷ் பைலட், 1945 பிப்., 10ல் ராஜஸ்தானில் பிறந்தார். இவரின் இயற்பெயர், ராஜேஷ்வர் பிரசாத் பிதுாரி. விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றியதால், 'பைலட்' என்ற பட்டம், இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவின் நெருங்கிய நண்பர் இவர். ராஜஸ்தானின் டவுசா லோக்சபா தொகுதியிலிருந்து, நான்கு முறை, பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். உள்நாட்டு பாதுகாப்பு, தொலை தொடர்புத்துறை, சாலை போக்குவரத்து துறைகளின் மத்திய அமைச்சராக பணியாற்றியவர்.

இவர், 2000 ஜூன், 11ல், டவுசா நகர் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் பலியானார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவர், முன்னாள் பிரதமர் இந்திராவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்; இந்திரா மகன் ராஜிவ், நரசிம்மராவ் அமைச்சரவைகளில் அங்கம் வகித்தவர். இவர் பிறந்த நாள்இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X