ஜூனியர் உலக கோப்பை: கோட்டைவிட்டது இந்தியா| Dinamalar

ஜூனியர் உலக கோப்பை: கோட்டைவிட்டது இந்தியா

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (5)
Share

இந்த செய்தியை கேட்க

போட்செப்ஸ்ட்ரூம்: ஜூனியர் உலக கோப்பை பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி தோல்வியடைந்தது. வங்கதேச அணி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



latest tamil news



தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.


latest tamil news



இந்திய அணிக்கு திவ்யான்ஷ் சக்சேனா (2) மோசமான துவக்கம் தந்தார். பொறுப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதமடித்தார். திலக் வர்மா 38 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பிரியம் கார்க் (7) ஏமாற்றினார். ஜெய்ஸ்வால் 88 ரன்னில் 'பெவிலியன்' திரும்பினார். சித்தேஷ் வீர் (0) நிலைக்கவில்லை. ஜூரெல் (22) சோபிக்கவில்லை.


latest tamil news



மற்றவர்கள் ஏமாற்ற இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட் கைப்பற்றினர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (17) சுமாரான துவக்கம் தந்தார். பிஷ்னாய் பந்தில் மகமதுல் ஹசன் ஜாய் (8), தவ்ஹித் ஹிரிடோய் (0), ஷஹாதத் ஹொசைன் (1) அவுட்டாக்கினர். வங்கதேச அணி 27 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இமான் (47) நம்பிக்கை தந்தார்.


latest tamil news



வங்கதேச அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பின், 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என, 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. வங்கதேச அணி 42.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முதன்முறையாக உலக கோப்பை வென்றது. கேப்டன் அக்பர் அலி (43), ரகிபுல் ஹசன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X