சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு பேட்டி அறிக்கை

Added : பிப் 09, 2020
Advertisement
 பேச்சு பேட்டி அறிக்கை

'இலங்கை தமிழர் விவகாரம் பற்றி, கழுத்து நரம்பு தெறிக்க பேசும் இவர் வாழ்க்கையில், நிறைய சோகம், காமெடி, சண்டை காட்சிகள் இருக்கும் போல...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகை விஜயலட்சுமி அறிக்கை:

கிறிஸ்துவ சைமனான நீங்கள் இப்போது சீமானாக மாறியுள்ளதால், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, நெற்றி நிறைய விபூதியுடன் வருகிறீர்கள். பாராட்டுகள். ஆனால், சிவனை வழிபட்டதற்காக, என்னை நீங்கள் அப்போது கொடுமை படுத்தினீர்கள். அதை மறந்து, இப்போது சிவனிடம் அடைக்கலம் புகுந்துள்ளது, வடிவேலு காமெடி போல இருக்கிறது.



'அந்த, 'மேஜிக்' எப்படி நிகழும் என்பதையும் சொல்லுங்களேன்...' என, கேட்கத் துாண்டும் வகையில், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேட்டி:

உ.பி.,யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற பெரிய தலைவர்கள் இருந்த நிலையில், பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாது என்று தான் பலரும் நினைத்தனர். அதை பொய்யாக்கிஉள்ளோம். அதுபோல, தமிழகத்திலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதற்காக, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும். 'பலவீனமாக இருப்பதை சரி செய்ய, 'காம்ப்ளான்' குடிக்க சொல்கிறீர்களா... சும்மா பிதற்றாதீர்கள்...' என, நெத்தியடி கொடுக்கும் வகையில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி:
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., அரசு பலவீனமாகத் தான் இருக்கிறது. முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தனித்தனியாக செயல்பட்டவர்கள். இப்போது, ஒன்றுபட்டுள்ளனர். எனினும் மாநில நலனை விட்டுக் கொடுக்கக் கூடிய பலவீனமான அரசாகத் தான் உள்ளது.

'இதற்கு காரணம், பணிவா, துணிவா, பயமா என்பது தான் தெரியவில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், 'துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி:
பா.ஜ., முன்னாள் தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்மராவ், இப்போதைய பிரதமர் மோடி போன்ற பலருடன் நெருங்கி பழகியுள்ளேன். எனினும், யாருடனும் நான் போட்டோ எடுத்துக் கொண்டதில்லை. அதுபோல, என் குடும்பத்தினர் யாரையும், வெளி உலகத்தினருக்கு விளம்பரப்படுத்தவும் இல்லை.

'காமராஜர் பாயச் செய்தார் என்பது சரியாக இருக்கும். ஆனால், நீங்கள் கூறும் இரண்டாம் நபர், பாய விடவில்லையே...' என, கிண்டலடிக்கும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
ஈ.வெ.ரா.,வும், காமராஜரும், திராவிட இயக்கமும், கல்வி நீரோடையை, தமிழகம் எங்கும் பாயச் செய்தனர். அத்தகைய மாநிலத்தில், பள்ளிகளில் இடை நிற்றல், 100 சதவீதம் ஆகியுள்ளது. இந்த அவலம் குறித்து, மறு சிந்தனை தேவை.

'இது தான், தமிழகம் அறிந்த உண்மையாயிற்றே... திரும்பத் திரும்ப சொல்லணுமா?' என, கேட்கத் துாண்டும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி:
குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், நாட்டின் நலனை கருதாமல், ஓட்டு நலனை கருதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி வருகிறார்; அவரது போக்கு, கண்டிக்கத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X