சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தங்க செயினை திருப்பி கொடுத்த அழகிரி!

Added : பிப் 09, 2020
Advertisement
தங்க செயினை திருப்பி கொடுத்த அழகிரி!

''என்னப்பா, இந்த மகளிர் அணிக்கு வந்த சோதனை...'' என்றபடியே, நாயர் கொடுத்த டீயை உறிஞ்சினார், அன்வர்பாய்.

''என்ன சொல்ல வர்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பா.ம.க., மகளிர் அணி சார்புல, ஜன., 4ம் தேதி, பூம்புகார்ல மாநாடு நடத்துறதா அறிவிச்சாங்க... ஆனா, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால, மாநாட்டை தள்ளி வச்சாங்க பா...''மறுபடியும், பிப்., 1ம் தேதி மாநாடு நடத்தப்படும்னு அறிவிச்சாங்க... ''ஆனா, அப்ப அரசியல் சூழ்நிலை சரியா இல்லைன்னு, மீண்டும் ரத்து செஞ்சாங்க... 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அப்புறம், மகளிர் அணி மாநாட்டை பத்தி யோசிக்கலாம்'ன்னு, கட்சி தலைமை சொல்லிடுச்சு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாயிடுத்து ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''யாருவே இந்த கதிக்கு ஆளானது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி மாநகர் மாவட்ட, தி.மு.க., செயலரா இருந்தவர் அன்பழகன்... இப்படி ஒரு பதவி இருக்குன்னே, கட்சியினர் பலருக்கு தெரியாது... ''ஏன்னா, 'மாஜி' அமைச்சர் நேருவுக்கு அடங்கி, அமைதியா இருந்தார் ஓய்...''கட்சி சார்பா நடக்கற நிகழ்ச்சியில கூட, பத்தோட பதினொன்னா தான் நிப்பார்... திருச்சி தெற்கு மாவட்டச் செயலரா இருந்த நேருவை, சமீபத்துல, தி.மு.க., முதன்மை செயலர் பதவிக்கு மாத்திட்டாளோல்லியோ...''இதனால, திருச்சியை மூணு மாவட்டமா, தி.மு.க., பிரிச்சப்ப, தனக்கும் ஒரு மாவட்டச் செயலர் பதவியை, நேரு வாங்கித் தருவார்ன்னு, அன்பழகன் எதிர்பார்த்தார் ஓய்... ஆனா, எதுவும் கிடைக்கலை... ''இதனால, வீட்டுலயே முடங்கிட்ட அன்பழகன், 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுத்தே'ன்னு, தன்னை பார்க்க வர்ற கட்சியினரிடம் புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தங்கச் செயினை திருப்பி குடுத்துட்டாருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி. ''யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரையில, சமீபத்துல, தன் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவை அழகிரி நடத்தி வச்சாருங்க... மண மேடையிலயே, தன்னோட, 69வது பிறந்த நாளை, 'கேக்' வெட்டி, அழகிரி கொண்டாடுனாருங்க...''அப்ப, அவரோட ஆதரவாளர்கள் சார்புல, அழகிரிக்கு தங்கச் செயின் அணிவிச்சாங்க... அன்னைக்கு ராத்திரி, விக்கிரமங்கலம் பண்ணை தோட்டத்துல, அழகிரி, தன் ஆதரவாளர்களுக்கு, தடபுடலா பிறந்த நாள் விருந்து கொடுத்தாருங்க... ''அப்ப, மணமேடையில கொடுத்த தங்கச் செயினை, அவங்ககிட்டேயே திருப்பி கொடுத்துட்டார்... 'பல பிரச்னைகளுக்கு மத்தியிலயும், நீங்க என் கூட இருக்கிறதே, பெரிய பரிசு தான்... எனக்கு, அதுவே போதும்'ன்னு உருகியிருக்கார்... ''அதைக் கேட்டு, ஆதரவாளர்கள் நெகிழ்ந்து போயிட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X