சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பணியாளர் சங்கம் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் 

Added : பிப் 09, 2020
Advertisement

கடலுார் : ''தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், வரும், 14ம் தேதி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,'' என, அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

கடலுாரில், அரசு பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பாலசுப்ரமணியன் அளித்த பேட்டி:தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, வரும், 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள், ஊராட்சி களப் பணியாளர்கள், பல துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
மத்திய - மாநில அரசு துறைகளில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில், அரசு பணியாளர் சங்கம் சார்பில், விழுப்புரம் நகராட்சி திடலில், வரும், 14ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடக்கிறது.டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

திருச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், வரும்,14ம் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு பணியாளர் சங்க மாநில செயலர் சிவக்குமார் உட்பட பலர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X