சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பறிபோன வாய்ப்பு!

Added : பிப் 09, 2020
Advertisement
 பறிபோன வாய்ப்பு!

'எப்போது வாய்ப்பு கிடைக்கும் என, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு, அந்த வாய்ப்பு கிடைத்து, அது, பாதியிலேயே பறி போனால் எப்படியிருக்கும்' என, தெலுங்கு தேசம் கட்சியினரை பற்றி கிண்டலடிக்கின்றனர், ஆந்திர மக்கள்.

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., - காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதில் இருந்தே, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு இறங்கு முகம் தான். அடுத்தடுத்து வழக்குகள், சட்டசபையில் பகிரங்க எதிர்ப்பு, போராட்டம் நடத்துவதற்கு தடை என, சந்திரபாபுவை, 'ரவுண்டு' கட்டி அடிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

இந்த நேரத்தில் தான், ஆசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம், தொழிற்சாலையை ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகத்துக்கு மாற்றப் போவதாக தகவல் வெளியானது. ஏக்கத்துடன் காத்திருந்த சந்திரபாபுவுக்கு, இந்த பிரச்னை லட்டு கிடைத்தது போல் ஆகி விட்டது. 'ஜெகன்மோகன் அரசின் திறமையின்மை காரணமாகவே, அந்த நிறுவனம் தமிழகத்துக்கு செல்கிறது' என, வெளுத்து வாங்கினார்.

அடுத்த நாளே, அந்த கார் தயாரிப்பு நிறுவனம்,'நாங்கள் தமிழகத்துக்கு செல்லப் போவதாக வெளியான தகவல் தவறு. வதந்தியை பரப்புகின்றனர்' என, மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, 'கிடைத்த ஒரு வாய்ப்பும் பறிபோய் விட்டதே' என, புலம்புகிறார் சந்திரபாபு நாயுடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X