சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மாணவி மரணம் 'லிப்ட்' தந்தவர் தற்கொலை

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement

நாகப்பட்டினம் : நாகை அருகே, பஸ் மோதி, பிளஸ் 1 மாணவி உயிரிழந்தார். அவரை பைக்கில் அழைத்துச் சென்ற உறவினர், மன உளைச்சலில், தற்கொலை செய்து கொண்டார்.

நாகை அடுத்த வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர், மதியழகன் மகள் மகரஜோதி, 16; நாகூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.வழக்கமாக, பள்ளி வேனில் பள்ளிக்கு செல்பவர், நேற்று முன்தினம், வேனை தவற விட்டதால், உறவினர் வீரமணி, 35, என்பவருடன், பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டார்.கிழக்கு கடற்கரை சாலையில், பரவை கிராமம் அருகே சென்றபோது, வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் மகரஜோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

லேசான காயத்துடன் தப்பிய வீரமணி, மாணவி இறப்புக்கு காரணமாகி விட்டோம் என்ற மன உளைச்சலில் இருந்தார்.அன்று இரவு, தன் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு, மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
10-பிப்-202016:41:19 IST Report Abuse
R S BALA இதெற்கெல்லாம் கவனக்குறைவு அவசரம் என்றெல்லாம் சொன்னாலும் ,இறுதியாக விதி என்பதுதான் விடையாக உள்ளது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X