பொது செய்தி

தமிழ்நாடு

வன சட்ட பயிற்சி முகாம் நிறைவு 220 மாஜிஸ்திரேட்கள் பங்கேற்பு

Added : பிப் 09, 2020
Advertisement

கூடலுார் : தமிழகத்தில் உள்ள, 220 மாஜிஸ்திரேட்களுக்கு வன சட்டங்கள் குறித்து, நான்கு கட்டங்களாக நடந்த பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், மாநில நீதித்துறை மற்றும் வனத்துறை சார்பில், 220 இளம் மாஜிஸ்திரேட்கள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனச் சட்டங்கள், வனக் குற்றங்கள் குறித்த முகாம் நடந்தது.கடந்த ஆண்டு, டிச., 14ல் முகாம் துவங்கி, வார இறுதியில், இரண்டு நாட்கள், மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. முதுமலை தெப்பக்காடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று நிறைவு பெற்ற, நான்காவது மற்றும் இறுதி பயிற்சி முகாமில், 57 மாஜிஸ்திரேட்கள் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்துாஸ், முதுமலை கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் செண்பகபிரியா மற்றும் வனத்துறை அதிகாரிகள், வனச் சட்டங்கள் குறித்து பேசினர்.நான்கு கட்டங்களாக நடந்த பயிற்சி முகாமில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை பயிற்றுனர்கள், வனத்துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X