பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல், தாம்பரத்தில் 'தேஜஸ்' நிறுத்தப்படுமா?

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (6)
Advertisement
 திண்டுக்கல், தாம்பரத்தில் 'தேஜஸ்' நிறுத்தப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்துார் : 'மதுரை - சென்னை தேஜஸ் ரயில், திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்' என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளதால், தென்மாவட்ட பயணியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சென்னையில் இருந்து வியாழன் தவிர, மற்ற நாட்களில், காலை, 6:00 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில், திருச்சி, கொடைரோடு ஆகிய நகரங்களில் மட்டும் நின்று, மதியம், 12:30 மணிக்கு மதுரைக்கு வருகிறது.மறுமார்க்கத்தில் மதுரையில், பிற்பகல், 3:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:30 மணிக்கு சென்னை செல்கிறது. வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் மட்டுமே, இந்த ரயில் முழு அளவில் நிரம்புகிறது. மற்ற நாட்களில், காலியிடங்கள் நிறைய உள்ளன.

இதற்கு முக்கிய காரணம், திண்டுக்கல், தாம்பரத்தில் இந்த ரயில் நிற்காததே. தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர், தென் சென்னை பகுதியில் தான் உள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தை, இரவு, 8:50 மணிக்கு கடக்கும் தேஜஸ், அங்கு நிற்பதில்லை. பயணியர் எழும்பூரில் இறங்கி, அங்கிருந்து வீடு திரும்ப, இரவு, 11:00 மணியாகி விடுகிறது.சென்னையில் இருந்தும் அதிகாலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், தென் சென்னை பகுதி மக்கள், எழும்பூர் சென்று, ரயிலை பிடிக்க முடிவதில்லை.

இதனால், தேஜசை அதிகம் மக்கள் பயன்படுத்துவதில்லை.இதேபோல தான், திண்டுக்கல் பகுதி பயணியரும் பாதிக்கப்படுகின்றனர். 'எனவே, தாம்பரம், திண்டுக்கல்லில், தேஜஸ் ரயில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்' என, பயணியர் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeeva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-202020:01:12 IST Report Abuse
jeeva தாம்பரம் பகுதிகளில் அதிகம் இருப்பவர்கள் தென் மாவட்டத்தினர் தான் எளிதில் பெருங்குளத்தூர் சென்று வார இறுதி நாட்களில் பேருந்துகளில் ஆயிரங்களில் டிக்கெட் எடுத்து செல்கின்றனர் தாம்பரத்தில் நின்றாள் உண்மையிலேயே நல்ல விஷயம் தான். பயணிகள் பணத்தை எண்ணுவதில்லை நேரத்தை தான் பார்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-பிப்-202015:35:44 IST Report Abuse
Vijay D Ratnam தாம்பரம், திண்டுக்கல் மக்களுக்கு மதுரை, சென்னை செல்ல நிறைய எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. பிறகு செங்கற்பட்டு மக்கள் கேட்பார்கள், பிறகு மேல்மருவத்தூர் பக்தர்கள் கேட்பார்கள். பிறகு திண்டிவனம்,விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை மக்கள் கேப்பார்கள். தேஜஸ் ரயிலை பாசஞ்சர் ரயில் ஆக்காமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11-பிப்-202011:00:14 IST Report Abuse
Ramalingam Shanmugam கூட்ஸ் மாதிரி மாற்றி விடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X