பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு விஷம் வேண்டாம் வேளாண் விஞ்ஞானி எச்சரிக்கை தென்னைக்கு விஷம் விஞ்ஞானி எச்சரிக்கை

Added : பிப் 09, 2020
Advertisement

பொங்கலுார் : ''தென்னை மர வேரில், விஷ மருந்து வைத்தல் போன்ற செயல்களை, சில விவசாயிகள் கையாளுவதால், தேங்காய், இளநீர் சாப்பிட முடியாததாக மாறும்,'' என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதுபாண்டி எச்சரித்துள்ளார்.

வெள்ளை ஈக்கள் தாக்குதலால், தென்னையில் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், மரங்களே கருகும் அபாயம் எழுந்துள்ளது. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண் பல்கலைக் கழகம், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை, ஒட்டுண்ணிகள் தயாரித்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்கின்றன. ஒட்டுண்ணிகள், முட்டைப் பருவத்திலேயே வெள்ளை ஈக்களை அழித்து விடும். விவசாயிகளிடம் விழிப்புணர்வு இன்மையால், இவற்றை பயன்படுத்துவதில், தொய்வு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை ஈக்களை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்பில், தென்னை மரத்தின் வேரில், அதிக விஷத்தன்மை உடைய மருந்துகளை கட்டி விடுதல், அதிக வீரியமிக்க விஷ மாத்திரைகளை மரத்தில் துளையிட்டு வைத்தல் போன்ற முறைகளை, சில விவசாயிகள் கையாளுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும், திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதுபாண்டி கூறியதாவது:தென்னை மரங்களுக்கு மருந்து தெளிப்பதால், பூச்சித் தாக்குதல் இன்னும் அதிகரிக்கும். மரவேரில் விஷ மருந்து வைத்தால், அந்த மரத்தின் தேங்காய், இளநீர், கருவில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும்.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு, பார்வைத் திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். விஷம், இரண்டு ஆண்டுகளுக்கு தென்னை மரங்களில், வீரியத்துடன் காணப்படும். இந்த மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இளநீர் சாப்பிட உகந்தது அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X