பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., முறைகேட்டை தடுக்க விடைத்தாள் பாதுகாப்பில் மாற்றம்?

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு, விடைத்தாள், பாதுகாப்பு, மாற்றம்?

சென்னை: 'அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுக்கு காரணமான, விடைத்தாள் திருத்தம் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப் - 2 ஏ' தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், டி.என்.பி.எஸ்.சி., மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளன. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவோர், அரசு வேலைகளிலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் மீதும், ஆர்வம் குறைந்து காணப்படுகின்றனர்.

தேர்வர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என, தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். முறைகேடுகளை தடுக்க, கடும் நடவடிக்கைகளை, டி.என்.பி.எஸ்.சி., எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது. தேர்வர்களை மட்டும் கட்டுப்படுத்தும், கூடுதல் கெடுபிடிகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஆனால், முறைகேட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.தேர்வு மையங்களில், கண்காணிப்பு பணி முறையை மாற்றுதல், தேர்வு பணிக்கான ஊழியர் நியமனத்தில் பாரபட்சமற்ற தன்மை, விடைத்தாள் திருத்த பணிகளில் மாற்றம், விடைத்தாளின் உண்மை தன்மையை சோதனை செய்வது போன்ற நடைமுறைகள், அறிமுகம் செய்யப்படவில்லை.

இடைத்தரகர்களிடம் சிக்காமல், விடைத்தாளை எடுத்து வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்; அழியும் மை போன்றவற்றை தேர்வர்கள் பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை இல்லை. இவ்வாறு, சிறப்பு கவனம் செலுத்தப்படாதது, தேர்வாணையத்தின் மீது, மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது என, தேர்வர்கள் கூறுகின்றனர்.

எனவே, விண்ணப்பதாரர்களிடம் அதிக தகவல்களை பெறுவதில் காட்டும் அக்கறையை, தேர்வில் முறைகேடு இன்றி, விடைத்தாள் திருத்தம், முடிவுகள் வெளியிடுதல், நேர்முக தேர்வுக்கான குழுவில் நியாயமானவர்களை நியமித்தல் போன்றவற்றிலும், தேர்வாணையம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-பிப்-202019:04:18 IST Report Abuse
D.Ambujavalli ‘போங்கடா, உங்க தேர்வும் பணி நியமனமும் காசைக்கொட்டிக்கொடுத்து, மாய்ந்து மாய்ந்து படித்து, உயிரை விட்டு, தேர்வு எழுதுவோம் நாங்கள், யாரோ மேலிருந்து கீழ் வரை லஞ்சம் கொடுத்து உட்காரும் நீங்களே உங்க ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அப்ளிகேஷன் பணம், தேர்வு மையங்களுக்கு அலையும் செலவு, நேர விரயமாவது மிச்சமாகட்டும்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
10-பிப்-202012:30:43 IST Report Abuse
நக்கீரன் டி.என்.பி.எஸ்.சி. யின் நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளது. திருட்டு கூட்டம் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திலேயே இந்த முறைகேடுகளை நிறைவேற்றி உள்ளது. அதற்க்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முதல்வரும் உடந்தை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற முறைகேடுகள் இனி நடக்காதே தவிர கண் துடைப்புக்காக எதோ சில நடவடிக்கைகள் எடுப்பது வெட்கக்கேடானது. இப்போது கூட இனி முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. இது மீண்டும் முறைகேடு செய்பவர்களுக்கு சாதகமாகவே அமையும். இந்த முறைகேடு மட்டுமல்ல இனி முறைகேடு எதுவும் நடைபெறக்கூடாது எனில் நம்மை ஆள்பவன் நேர்மையாளனாக, சமரசம் செய்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும். இன்றைக்கு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளோ, துறை அமைச்சரோ அல்லது முதல்வரோ யாரும் இந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்றதாக தெரியவில்லை. அரசை கைப்பற்றி விட்டால் தங்கள் மாமன், மச்சான் சொந்த பந்தங்கள் அனைத்தையும் முறைகேடாக அரசு பணியில் சேர்த்து சொகுசாக வாழ்கிறார்கள். சட்டத்தை மதிப்பவர்கள் தெருவில் வறுமையில் வாடுகிறார்கள். நாம் அரசை தேர்ந்தெடுப்பது எதற்க்காக? சட்டப்படி, நியாயமாக, நேர்மையாக நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால், அப்படி எதுவும் இன்றைக்கு நடக்கவில்லை. அப்புறம் என்ன முடிக்கு இந்த அரசு? எதற்கு தேர்தல்? மக்கள் மட்டும் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்? சரி, அமைதியாக போராடினாலாவது நியாயம் கிடைக்கிறதா? இல்லை. நீதிமன்றத்திலாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தொடர்ந்து இது போன்று ஏமாற்றப்படுபவன் தீவிரவாதத்தை கையிலெடுப்பதில் என்ன தவறு? அவனுக்கு வேறு என்ன வழி இருக்கிறது இந்த போலி ஜனநாயக நாட்டில்? உண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட வேண்டியவர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் இந்த அரசியல் தீவிரவாதிகள்தான். இதுதான் இன்றைய திறமை இருந்து வேலையை கிடைக்காத நேர்மையான இளைஞர்களின் குமுறல். மோடிஜி நினைத்தால் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த முடியும். ஆனால் திமுக வரக்கூடாது என்பதற்காக பிஜேபி இன்னும் இந்த ஆட்சியை தாங்கிப்பிடிப்பது வெட்கக்கேடானது. நேர்மையான ஆட்சியின் சுகத்தை தமிழக மக்கள் ஒருமுறை உணரும்படி செய்துவிட்டால் போதும். நல்லாட்சி மலரும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-பிப்-202008:49:07 IST Report Abuse
RajanRajan நீங்க என்ன நடைமுறை அமல் படுத்தினாலும் சரி. அந்த சந்திரமண்டலத்திலே இருந்து லேசர் கற்றைகளை வைத்து டார்ச் அடிச்ச மாதிரி அடிச்சு அத்தனை விடைத்தாளில் புதுமை புகுத்தி காசு பார்த்துருவேமே. கட்டுமர நூதன திருட்டுன்னு என்ன சும்மாவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X