விதவையர் அதிகரிப்பு ஹிந்து அமைப்பு வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதவையர் அதிகரிப்பு ஹிந்து அமைப்பு வேதனை

Added : பிப் 09, 2020
Share

ஈரோடு, : ''இளம் விதவையர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்,'' என, ஹிந்து அன்னையர் முன்னணி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஹிந்து அன்னையர் முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம், ஈரோட்டில், இரண்டாவது நாளாக நேற்று நடந்தது. டாக்டர் சித்ரா தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் பூசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'குடியுரிமை திருத்த சட்டத்தின், உண்மை தன்மையை, மக்களிடையே எடுத்து சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழகத்தில், 35 - 40 வயது விதவையர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்ற செயல்கள் அதிகரிப்புக்கும், மதுவே காரணம்.

'எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை, அரசு கொண்டு வர வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் பாரம்பரிய ஆன்மிக கல்வியை கொண்டு வர வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X