மதுரை : ''தி.மு.க.,விற்கு செல்வாக்கு இல்லாததால் தான், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோரை நம்பி, ஸ்டாலின் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:தி.மு.க.,வும் அதன் இலவச இணைப்புகளும் சேர்த்து, தமிழகத்தில் மத ரீதியான தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறுகின்றனர்.சீமானின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஹிந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்கு தலை மக்கள் புரிந்து உள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில், விதிமுறைக்கு புறம்பாக நடந்த கோவில் அதிகாரியை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு இல்லாததால், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து, தேர்தலை சந்திக்கும் கட்டாயம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டு உள்ளது. நெய்வேலியில் சினிமா படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதால், விஜய் படப்பிடிப்பு நடத்த கூடாது.மோடி பிரதமரான பின், இலங்கையில் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. வருமானவரித் துறை சுயமாக செயல்படுகிறது. சினிமா துறையில் கருப்பு பணம் நிறைய உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE