அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி குழப்பத்தில் அ.தி.மு.க., - பா.ஜ.,

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (11+ 6)
Advertisement
 கூட்டணி,அ.தி.மு.க., - பா.ஜ., குழப்பம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், கூட்டணியை தொடர்வதா, இல்லை துண்டித்து கொள்வதா என, முடிவெடுக்க முடியாமல், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தவித்து வருகின்றன.

தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றுள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் அதிகரித்தபடி உள்ளன. 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அறிவித்தபடி இடங்களை வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகிகள் மதிக்கவில்லை' என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர்.

அதன் தொடர்ச்சியாக, பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசை விமர்சிக்க, பதிலுக்கு அவரை, அமைச்சர் ஜெயகுமார் வறுத்தெடுத்தார்.


குற்றச்சாட்டு


இது, இரு கட்சியினருக்கும் இடையே, விரிசலை அதிகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, அ.தி.மு.க.,வை, நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்; அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய, இரு கட்சிகளும், ஊழலில் திளைப்பவை. இரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் வரை, தமிழகத்தில், கட்சியை வளர்க்க முடியாது.ரஜினி கட்சி துவக்கினால், அவருடன் கூட்டணி அமைப்போம் அல்லது, தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத கட்சிகளுடன், கூட்டணி அமைப்போம். அதற்கு முன்னோட்டமாக, அரசின் செயல்பாடுகளை விமர்சிப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஆனால், பா.ஜ., டில்லி தலைமையோ, 'அ.தி.மு.க.,வை கழற்றி விட்டால், தி.மு.க., எளிதாக வெற்றி பெற்று விடும். நடிகர் ரஜினி, கட்சி ஆரம்பிப்பாரா; ஆரம்பித்தால், நம்முடன் கூட்டணி அமைப்பாரா என்பது சந்தேகம். எனவே, அமைதியாக இருங்கள்' என, கூறியுள்ளது.அதேபோல, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க.,விலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகளை இழக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில், பா.ஜ., மீதான வெறுப்புணர்ச்சி அதிகமாக உள்ளது. எனவே, பா.ஜ.,வை ஏன் சுமக்க வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கேட்க துவங்கி உள்ளனர்.


எதிர்ப்பு


சமீபத்தில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது, பல அமைச்சர்கள், 'பா.ஜ.,வின் அனைத்து செயல்பாடு களையும், ஆதரிக்க வேண்டாம். மக்களிடம் எதிர்ப்பு அதிகமாக உள்ள விஷயங்களை, நாமும் எதிர்ப்போம்' என, கூறியுள்ளனர். அதை கேட்ட முதல்வரும், துணை முதல்வரும், 'பல விஷயங்களில், பா.ஜ., உதவி தேவைப்படுகிறது. எனவே, விரைவில் நல்ல முடிவெடுப்போம்' என, கூறியுள்ளனர்.

தற்போதைய சூழலில், இரு கட்சிகளும், கூட்டணியில் தொடர்ந்தாலும், பட்டும் படாமல் உள்ளன. சூழ்நிலைக்கேற்ப கூட்டணியை தொடர்வதா, வேண்டாமா என, முடிவெடுக்க தீர்மானித்துள்ளன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (11+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
10-பிப்-202022:38:02 IST Report Abuse
ரத்தினம் சிறும்பான்மையினர் ஏற்கனவே மத சகிப்பில்லாதவர்கள். அவர்களுக்கு தேச விரோத திமுக இல்ல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மேலும் வெறி ஏற்றி வைத்திருக்கிறது. இதை மக்கள் உணர்ந்து திமுகவை தேசத்தை விட்டே விரட்ட வேண்டும். அதற்கு ரஜினி யையும் இணைத்து அதிமுக பாஜக பாமக கூட்டு தொடர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202015:23:45 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் நாளை டெல்லி தேர்தல் முடிவு பொறுத்து அஇஅதிமுக நிலை மாறும்.பெரும்பாலான நிர்வாகிகள் மந்திரிகள் பிஜேபி கூட்டணியை விரும்பவில்லை.நானும் அஇஅதிமுகதான்.திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை(தஞ்சை.நாகை உட்பட)பிஜேபி கூட்டனி தொடர்ந்தால் இந்த பகுதி முழுவதும் திமுக முல்லு வெற்றி பெற்றுவிடும்.அந்த அளவு முஸ்லிம்கள் அதிகம் இங்கே.தனித்து நின்றால் அஇஅதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.எங்கள் அமைச்சர் காமராஜ் நன்கு அறிவார்.அவருக்கு தனிப்பட்ட முஸ்லிம்களின் ஆதரவு இருந்தாலும் பிஜெபி ஆதரவால் ஓட்டுக்கள் விழாது.இதான் நிதர்சனம்.இந்த பகுதியில் பிஜேபி பூஜ்யம்.காழ்புனர்வில் சொல்லவில்லை.அஇஅதிமுக பூத் ஏஜென்ட் என்ற முறையில் சென்றதேர்தலில் கேவமான தோல்வியை முதன்முதலா சந்தித்தோம்.பிஜேபி கூட்டனி தொடர்ந்தால் ஆட்சியை இழப்பது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-பிப்-202014:37:43 IST Report Abuse
Vijay D Ratnam எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக, இரட்டை இலை இந்த நான்கும் தமிழ்நாட்டின் சக்ஸஸ் பிராண்ட். அதிமுக வாக்கு வங்கி அவ்வளவு சுலபத்தில் யாராலும் முழுங்கிவிடமுடியாது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்து கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் அமரவைத்து பெருமை பெற்ற ரஜினிக்கு உண்டு ரஜினிக்கு அதிமுகவினரிடம் எப்போதுமே நெருக்கம் கிடையாது. ஜெயலலிதா சொல்லவே வேண்டாம் அண்டவிடவே மாட்டார், கமல்ஹாசனுடன் மிக நெருக்கமாக இருந்த எம்ஜிஆர், ரஜினியை பெரிதாக கண்டுகொண்டதே இல்லை. அதே ரஜினி கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். கருணாநிதிக்கு நடத்தும் பாராட்டு விழாக்களில் ரஜினி மிஸ் ஆனதே இல்லை. கருணாநிதியை ஒரு மஹான் ரேஞ்சுக்கு பேசியதை எல்லாம் பார்த்தோம். பாஜக ரஜினி கூட்டணிதான் இயல்பாக இருக்கும். ரஜினி தனித்து நின்றால் ரஜினியும் காலி, பாஜகவும் காலி. பல கட்சிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திமுக ஆட்சியை பிடித்துவிடும், அதிமுக எதிர்கட்சியாகிவிடும். ரஜினி நோகாமல் நுங்கு தின்னவேண்டுமென்றால் 70 வயதில் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கிளம்பாமல் மதுரையில் ஒரு பெரிய மேடை போட்டு மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் என்று அனைவரையும் வரவழைத்து பாஜகவில் இணைந்து விடலாம். நம்மாளுங்க நல்லா உசுப்பேத்துவாங்க.ஒட்டு போடும் போது இரட்டைஇலை, உதயசூரியன் ரெண்டு பொத்தான்தான் கண்ணுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
10-பிப்-202018:09:52 IST Report Abuse
Kumarஹஹஹஹஹ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X