பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் இயந்திர விற்பனை

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னை : பொய் வாக்குறுதிகளை கூறி, வேளாண் இயந்திரங்களின் விற்பனையாளர்கள், விவசாயிகளை ஏமாற்றி வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இளைய தலைமுறையினர் பலரும், விவசாயத்தை கைவிட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு செல்வதே இதற்கு காரணம். எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, சாகுபடி செய்ய வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேளாண் பொறியியல் துறை வாயிலாக, டிராக்டர்,மினி டிராக்டர் உள்பட நவீன இயந்திரங்கள் மற்றும்கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தனியார் பலரும், இது போன்ற இயந்திரங்கள்மற்றும் கருவிகளை விற்கின்றனர். இவர்கள், வேளாண் பொறியியல் துறையின் மானியத்தை பெற்றுத் தருவதாக, விவசாயிகளிடம் பொய் வாக்குறுதிகளை கூறி, இயந்திரங்கள் மற்றும்கருவிகளை வாங்க வைக்கின்றனர். அதன்பின், மானியம் பெற்றுத் தராமல், விவசாயிகளை இழுத்தடிக்கின்றனர்.

விற்பனையாளர்கள் சிலர், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்தும் செயல்படுகின்றனர். இதனால், அந்நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கினால் மட்டுமே, மானியம் வழங்க முடியும் என, விவசாயிகளை அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.இதனால், வேறு வழியின்றி குறைந்த விலையில் கிடைக்கும் இயந்திரங்களை, கூடுதல் விலையில் வாங்க வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

சில நாடுகளின் தரம் குறைந்த இயந்திரங்களும், விவசாயிகள் தலையில் கட்டப்படுகின்றன. இப்பிரச்னையை தடுக்க வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X