அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

Added : பிப் 09, 2020
Share

சென்னை : 'அனுமதி பெறாமல் இயங்கும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, மாவட்ட கலெக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை, புழல் பகுதியை சேர்ந்த, சிவமுத்து தாக்கல் செய்த மனு:திருவள்ளூர் மாவட்டம், தண்டல் கழனி கிராமம், சென்னையில், வடகரை, வடபெரும்பாக்கம், மாதவரம் பகுதிகளில், சில நிறுவனங்கள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றன. நிலத்தடி நீர்சென்னையில் மட்டும்,௧௫௦ நிறுவனங்கள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து, கேன்களில் நிரப்பி விற்பனை செய்கின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், ௨௦௦ இடங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 இடங்களில், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. அனுமதி பெறாமல், நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அறிக்கைபொதுப்பணித் துறை அல்லது சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் அனுமதியின்றி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும்,தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை, முழுமையாக மூட வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுப்பணித்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கும் நிறுவனங்களை மூடாமல், பட்டியலை மட்டும் தாக்கல் செய்ததற்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த வழக்கை, வரும், ௨௬ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அனுமதி பெறாமல் இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்க வேண்டும். உத்தரவை அமல்படுத்தாத கலெக்டர்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். சொந்தப் பணத்தில், அதை செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X