சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் புகுந்த முதலைகள் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

Added : பிப் 09, 2020
Advertisement
 பாலாற்றில் புகுந்த முதலைகள் சுற்றுலா பயணியர் குளிக்க தடை

மேட்டூர் : தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில், முதலைகள் காணப்படுவதால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் குளிக்க, கர்நாடகா வனத்துறை தடை விதித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பாலாற்றுடன், தமிழக எல்லை முடிகிறது. பாலத்தின் மறுகரையில், கர்நாடகா எல்லை துவங்குகிறது. அப்பகுதியில், கர்நாடகா வனத்துறையின் சோதனைச்சாவடி உள்ளது.இதனால், தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணியர், கர்நாடகா வனத்துறை சோதனை சாவடி அருகே ஓய்வெடுப்பர். அப்போது, பலர் குளிக்க, தண்ணீர் குடிக்க, பாலாற்றில் இறங்குவர். அங்கிருந்து, சிறிது துாரத்தில் பாலாறு, காவிரியாற்றுடன் கலக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பரில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அடித்து வரப்பட்ட சில முதலைகள், பாலாற்றில் புகுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அந்த முதலைகள், கர்நாடகா வனத்துறை சோதனைச்சாவடி அருகே, பாலாற்றின் கரைக்கு வந்து ஓய்வெடுப்பதை வன ஊழியர்கள் பார்த்துள்ளனர்.இதனால், மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணியர், பாலாற்றில் இறங்க, இரு மாதங்களாக, கர்நாடகா வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.

'மக்கள் யாரையும், பாலாற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம்' என, உயரதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக, கர்நாடகா வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X