பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுக்கும், 'பவர் கிரிட்' நிறுவனம்

Added : பிப் 09, 2020
Advertisement

பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 6,000 மெகா வாட் மின்சாரம் எடுத்து வரும், மின் வழித்தடம், விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதால், கோடை தேவையை பூர்த்தி செய்ய, தமிழக மின் வாரியம் சிரமப்பட வேண்டியதில்லை.மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம், பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு அதிக மின்சாரம் எடுத்து வர உள்ளது.

இதற்காக, அந்நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில் இருந்து, மஹாராஷ்டிரா - தெலுங்கானா - ஆந்திரா வழியாக, திருப்பூரில் உள்ள காங்கேயம் வரை, 800 கிலோ வோல்ட் திறனில், நவீன மின் வழித்தடம் அமைக்கிறது.மொத்தம், 1,767 கி.மீ., துாரம் உள்ள, அந்த வழித்தட பணிகள், தமிழகத்தில், வேலுார் - திருப்பத்துார் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - ஈரோடு - திருப்பூர் இடையில், 350 கி.மீ., அமைக்கப்படுகிறது.

கடந்த, 2017 அக்டோபரில் துவங்கிய அத்திட்டத்தை, 2019 மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்ட செலவு, 24 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தில், மின் வழித்தடம் அமைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன. பின், திட்டத்தின் அவசியம் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, ராய்கர் மற்றும் காங்கேயம் அருகில் உள்ள சிறுகனாரில், 800 கிலோ வோல்ட் திறனில் அமைக்கப்பட்ட, அதிநவீன துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும், மின் வழித்தட பணிகளும், 95 சதவீதம் மேல் முடிவடைந்து உள்ளன. அந்த வழித்தடம், அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. விரைவில், கோடை காலம் துவங்க உள்ள நிலையில், ராய்கர் - காங்கேயம் மின் வழித்தடத்தின் வாயிலாக, பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு, அதிக மின்சாரம் எடுத்து வர முடியும். இதனால், மின் தேவை எவ்வளவு அதிகரித்தாலும், அதை பூர்த்தி செய்ய, மின் வாரியம் சிரமப்படும் நிலை ஏற்படாது. மேலும், தமிழகத்தில், மே முதல் காற்றாலை சீசன் துவங்குகிறது.

அந்த காலத்தில், மின் வாரியம், பயன்படுத்தாத உபரி காற்றாலை மின்சாரத்தை, ராய்கர் - காங்கேயம் வழித்தடம் வாயிலாக, மற்ற மாநிலங்களுக்கு விற்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X