சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகள் மர்ம மரணம்

Added : பிப் 09, 2020
Advertisement

பந்தலுார் : தமிழக எல்லையை ஒட்டிய, வயநாடு பகுதியில், யானைகள் தொடர்ச்சியாக, மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, வயநாடு வனம். இதில், சேரம்பாடி வனச்சரகத்தை ஒட்டிய, கேரள மேப்பாடி வனத்தில், தொடர்ச்சியாக, காட்டு யானைகள் இறந்து வருகின்றன. ஏலமலை அருகே முண்டக்கை வனத்தில், ஜன., 26ல், ஒரு ஆண் யானை உயிரிழந்தது. இதன் தந்தங்களை திருடிச் சென்ற முகமது சாகீர், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து, ஜன., 28ம் தேதி காட்டிமட்டம், சூரல்மலை பகுதிகளில், இரண்டு யானைகள், ஜன., 31ல் புதுமலையில், ஒரு யானை, என கடந்த மாத இறுதியில், நான்கு யானைகள், மர்மமான முறையில் இறந்தன.யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால், வனத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

யானைகளை பிரேத பரிசோதனை செய்து, உடல் பாகங்களை பூக்கோடு வனக்கல்லுாரிக்கு ஆய்வுக்கு அனுப்பிய, டாக்டர் அருண் சக்கரியா கூறுகையில், ''ஆய்வறிக்கை வந்த பிறகே, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X