பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா, 'அட்மிட்' இல்லை! தனியார் மருத்துவமனைகள் முடிவு

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னை : 'கொரோனா' வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளை, 'அட்மிட்' செய்வதில்லை என, தனியார் மருத்துவமனைகள் முடிவெடுத்து உள்ளன.

தமிழகத்தில், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவனைகள் அதிகம் உள்ளன. இங்கு சிகிச்சை பெறுவதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர்.இந்நிலையில், சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள சிலருக்கு, பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, சுகாதாரத்துறை வாயிலாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக, சென்னை அரசு பொது மருத்துவமனை உள்பட, பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டு உள்ளன.அதேநேரம், தமிழகம் முழுவதும் உள்ள பிரபல மருத்துவமனைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க போவதில்லை என்று, முடிவெடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த, உரிய மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதே இதற்கு காரணம்.எனவே, கொரோனா வைரஸ் பாதிப்புடன் வருபவர்களை, உடனுக்குடன், அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை, சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், தும்மல், காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை, தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே, சோதனை செய்து அனுப்பி வைக்க, ஊழியர்களுக்கும், டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X