சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் பீதி திருச்சியில் வாலிபர், 'அட்மிட்'

Added : பிப் 09, 2020
Advertisement

திருச்சி : 'கொரோனா' வைரஸ் பீதியால், மேலும் ஒரு வாலிபர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சி அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.2ம் தேதி, சிங்கப்பூரில் இருந்து வந்த, மதுரை, கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அருண், 27, என்பவருக்கு, கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். எந்த பாதிப்பும் இல்லாததால், 5ம் தேதி வீடு திரும்பினார்.கடந்த மாதம், 31ம் தேதி, சீனாவில் இருந்து வந்த, புதுக்கோட்டை, விராலிமலையைச் சேர்ந்த மணிகண்டன், 37, என்பவர், கொரோனா வைரஸ் அச்சத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

ரத்தம் மற்றும் சளி போன்றவற்றை பரிசோதனை செய்ததில், வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சி, மருதாண்டகுறிச்சியைச் சேர்ந்த ராமமூத்தி, 25, என்பவருக்கு, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. நேற்று முன்தினம், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.'அவரது ரத்தம், சளி மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என, அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X