சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 விபத்துகளில் நான்கு பேர் பலி

Added : பிப் 09, 2020
Advertisement

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, மூன்று வெவ்வேறு விபத்துகளில், நான்கு பேர் பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையத்தைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 47; ஆட்டோவில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானு, 40. இருவரும், நேற்று முன்தினம், காந்தபாளையத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு ஐஸ் வியாபாரம் செய்ய, ஆட்டோவில் சென்றனர்.கலசப்பாக்கம் பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி, ஐஸ் ஆட்டோ மீது மோதியது. இதில், நெடுஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பானு, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேன் டிரைவர் ரமேஷ், 40, கைது செய்யப்பட்டார்.

செய்யாறு அடுத்த, கூழமந்தலைச் சேர்ந்தவர், விவசாயி மாயன், 53; இவர், 4ம் தேதி சைக்கிளில், அருகிலுள்ள உறவினரை பார்க்க சென்றார். எதிரில் வந்த தனியார் பஸ், மாயன் மீது மோதியதில் படுகாயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று உயிரிழந்தார்.  செய்யாறு அடுத்த, வெம்பாக்கம் சுருட்டலைச் சேர்ந்தவர், விவசாயி கன்னியப்பன், 55; இவர், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X