அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோலிய ஆலை ராமதாஸ் எதிர்ப்பு

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை : 'பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை, கடலுார் மாவட்டத்தில் அமைக்கக் கூடாது' என, தமிழக அரசை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:கடலுார் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பெட்ரோலிய சுத்தி கரிப்பு ஆலை அமைக்க, அமெரிக்காவை சேர்ந்த ஹால்தியா நிறுவனம் முன் வந்துள்ளது. இது குறித்து, அந்நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலை அமைவதால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகளே அதிகம். இந்த ஆலை துவங்கப்பட்டால், அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த, 2008ல், நாகார்ஜுனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை, கடலுாருக்கு எடுத்து வந்து, அப்போதைய, தி.மு.க., அரசு மிகப்பெரிய தவறை செய்தது.

அதுபோன்ற தவறை, ஹால்தியா ஆலையை எடுத்து வருவதன் வாயிலாக, அ.தி.மு.க., அரசும் செய்யக் கூடாது. கடலுார் மாவட்டத்தில், ஹால்தியா ஆலை மட்டுமல்ல; வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும், எந்த ஒரு பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தில் எந்த பகுதியிலும், அ.தி.மு.க., அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
10-பிப்-202007:54:40 IST Report Abuse
Endless இவரும் இவரது குடும்பத்தாரும் கொள்ளையடித்து சேர்த்த நிலங்களின் (திண்டிவனம், பாண்டிச்சேரி மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகள்) மதிப்பு பாதிக்கப்படும் என்ற பயம் தான்….
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
10-பிப்-202007:10:22 IST Report Abuse
natarajan s இவர் குடும்பத்தினர் மற்றும் இவர் மூலமாக கட்சியினர் வைத்திருக்கும் பெட்ரோல் பங்க் அனைத்தையும் மூடிவிட்டு போராட்டம் நடத்தட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
10-பிப்-202006:19:02 IST Report Abuse
 Muruga Vel இருக்கும் பெட்ரோல் பங்குகளை மூடிவிட்டு மாட்டு வண்டி பயணத்துக்கு மாற வேண்டும் .. முதலில் இவர் குடும்பம் தொடங்கட்டும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X