அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., அலுவலகத்தில் 118 அடி உயர கொடி கம்பம்

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னை : தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், 118 அடி உயரத்தில், கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., தலைமை அலுவலகம், சென்னை, கோயம்பேடில் உள்ளது. இங்கு, 118 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி கொடியை அறிமுகம் செய்த நாள், வரும், 12ம் தேதி வருகிறது. அன்றைய தினம், இந்த கம்பத்தில், தே.மு.தி.க., கொடியை, கட்சி தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைக்க உள்ளார். விழாவில் பங்கேற்க வரும்படி, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, விஜயகாந்த் அழைப்பு விடுத்து உள்ளார். விழாவில் பங்கேற்போருக்கு, பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா முடிந்ததும், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வது குறித்து, கட்சி யின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, விஜயகாந்த் கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X