பொது செய்தி

தமிழ்நாடு

95 வயது முதியவர் மோட்ச விரதம்

Added : பிப் 09, 2020
Advertisement

வந்தவாசி : வந்தவாசி அருகே, 95 வயது முதியவர், மோட்சமடைய, சல்லேகன் விரதம் இருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி இறந்து விட்டார்.இரு மகள்கள் உள்ளனர். சமண சமயத்தை பின்பற்றி வரும் இவர், மோட்சம் அடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் துவங்கினார்.இந்நிலையில், 7ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X