சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளில் 3,470 மீனவர்கள் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னை : 'பத்து ஆண்டுகளில், இலங்கை கடற்படையால், தமிழகத்தை சேர்ந்த, 3,470 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்' என, பா.ம.க., - எம்.பி., அன்புமணிக்கு, வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், பதில் அளித்து உள்ளார்.

'இந்தியாவும், இலங்கை யும் செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி, ௧௦ ஆண்டுகளில், எத்தனை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 'அது குறித்த விபரங்களை தெரிவியுங்கள்' என, ராஜ்யசபாவில், அன்புமணி கேள்வி எழுப்பினார்.அதற்கு, வெளியுறவு இணை அமைச்சர் முரளி தரன் அளித்த பதில்:வங்கக் கடலில் பன்னாட்டு எல்லையை கடந்து, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக, 2010 முதல், 2020ம் ஆண்டு பிப்ரவரி, 2 வரை, 3,470 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில், 3,450 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த, 2019ல் கைதான ஒருவர், 2020ல், கைதான, 19 பேர் என, மொத்தம், 20 பேர், இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இரு நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு பணிக்குழுவின் நான்காவது கூட்டத்தையும், அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது சுற்று பேச்சையும் விரைவில் நடத்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இந்த தகவல், பா.ம.க., வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X