அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு தன் பெற்றோர் பிறந்த இடம் தெரியாது: ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
 ரஜினிபெற்றோர் ,பிறந்த இடம், ஸ்டாலின்

சென்னை: 'திடீரென பேட்டி கொடுக்கக் கூடியவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நம்மை விமர்சிப்போரையும் பாதுகாக்கவே, கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:இஸ்லாமிய அமைப்பினர், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

அப்போது, 'நான் பிறந்த இடம், தேதி, அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என, எனக்கு தெரியவில்லை. எனக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தாலும், அதன் தொடர் நடவடிக்கையாலும், முதல் வர் பதவியில் எப்படியா வது நீடிக்க வேண்டும் என்பதற்காக, எதையும் அடமானம் வைக்கும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும், அவர் களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து, அனைவரையும் பாதுகாக் கவே, இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இதுவரையில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். இவற்றை, ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம்.

அதன்பின்னும், மத்திய அரசு பரிசீலிக்க தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம். பிப்., 14ல் துவங்கும், சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரிலாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohandas - sydney,ஆஸ்திரேலியா
13-பிப்-202009:16:52 IST Report Abuse
mohandas ஸ்டாலின் அவர்களே ஒரு நிமிடம் யோசனை செய்யுங்கள் இந்த போராட்டம் தேவையா மக்களை தவறான வழியில் திசை திருப்பலாமா முஸ்லீம் சகோதரர்களை பொய் சொல்லி ஏமாற்றுவது எத்தனை நாள் நடக்கும் மக்கள் திரண்டு கேள்வி கேட்பார்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-பிப்-202016:09:13 IST Report Abuse
madhavan rajan கனிமொழியின் தந்தை பிறந்த இடம் அவருக்கு தெரியுமா? இல்லை இவருக்கு தெரியுமா? இவரெல்லாம் கேள்வி கேட்க வந்து தங்களையே தாழ்த்திக் கொள்கிறார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12-பிப்-202004:46:35 IST Report Abuse
meenakshisundaramஇந்த மாதிரி ஸ்டாலின் பேசுவது 'தீப்பொறி ஆறுமுகம்' ஸ்டைல்...
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
16-பிப்-202021:07:58 IST Report Abuse
வல்வில் ஓரிசெந்தாமரை...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-பிப்-202016:05:49 IST Report Abuse
madhavan rajan சுடலைக்கு அவருடைய தந்தை திருட்டு ரயிலில் சென்னை வந்து பல ஆயிரம் கோடி சம்பாதித்தது தெரியாது போல. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
Rate this:
Dharma - Madurai,இந்தியா
12-பிப்-202010:13:09 IST Report Abuse
Dharmaசுடலை தந்தை வாரங்கல் ல் இருந்து வந்தவர் என்று கேள்விப்பட்டேன்....
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
16-பிப்-202021:08:41 IST Report Abuse
வல்வில் ஓரிஅன்பழகன் தமிழ் நாட்டு காரர்யா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X