ரஜினிக்கு தன் பெற்றோர் பிறந்த இடம் தெரியாது: ஸ்டாலின் மறைமுக விமர்சனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு தன் பெற்றோர் பிறந்த இடம் தெரியாது: ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (98+ 78)
Share
 ரஜினிபெற்றோர் ,பிறந்த இடம், ஸ்டாலின்

சென்னை: 'திடீரென பேட்டி கொடுக்கக் கூடியவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நம்மை விமர்சிப்போரையும் பாதுகாக்கவே, கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:இஸ்லாமிய அமைப்பினர், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

அப்போது, 'நான் பிறந்த இடம், தேதி, அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என, எனக்கு தெரியவில்லை. எனக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தாலும், அதன் தொடர் நடவடிக்கையாலும், முதல் வர் பதவியில் எப்படியா வது நீடிக்க வேண்டும் என்பதற்காக, எதையும் அடமானம் வைக்கும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்க கூடியவர்களுக்கும், அவர் களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து, அனைவரையும் பாதுகாக் கவே, இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இதுவரையில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். இவற்றை, ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம்.

அதன்பின்னும், மத்திய அரசு பரிசீலிக்க தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம். பிப்., 14ல் துவங்கும், சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரிலாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X