சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 யானைகள் உலா வனத்துறை எச்சரிக்கை

Added : பிப் 09, 2020
Advertisement

வேலுார் : காட்பாடி, 'டெல்' பகுதி அருகே, 14 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. 'யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர எல்லையில் இருந்து, வேலுார் மாவட்டத்திற்குள், காட்டு யானைகள் அவ்வப்போது வந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில நாட்களாக, காட்பாடி அடுத்த ராமாபுரம், ராஜாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில், 14 யானைகள் முகாமிட்டுள்ளன.அவற்றை விரட்டும் பணியில், ஒசூரிலிருந்து வந்துள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று, யானைக் கூட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள, 'டெல்' வெடிமருந்து தொழிற்சாலை அருகே முகாமிட்டன.

அவற்றை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைகளால், இதுவரை பயிர் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கோ, பிற உயிரினங்களுக்கோ தீங்கு ஏற்படவில்லை. அவசியம் கருதி வனப்பகுதிக்குள் செல்வோர், முன்னெச்சரிக்கைஉடன் செல்ல வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X