சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் நக்சல் நடமாட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

கோவை : கேரள மாநிலம், வயநாட்டில் மாவோயிஸ்ட் நடமாட்டம் காரணமாக, தமிழக - கேரள எல்லையோர சோதனை சாவடிகளில் நேற்று தீவிர வாகன சோதனை நடந்தது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகே உள்ள கம்பமலை கிராமத்துக்கு நேற்று பகலில், ஏழு மாவோயிஸ்ட்கள் வந்தனர். அங்கிருந்த மக்களுடன், அரைமணி நேரம் பேசினர். பின், அதே பகுதியில், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டினர். அங்கிருந்து சூரியமுடி மலைப் பகுதிக்கு சென்றனர்.தகவல் அறிந்தவுடன், கேரள அதிரடிப்படை போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால், மாவோயிஸ்ட்கள் வெளியிடங்களுக்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதால், தமிழக - கேரள எல்லையில் உள்ள கோவை, நீலகிரி மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், மாங்கரை மற்றும் ஆனைகட்டி சோதனை சாவடிகளில், தீவிர வாகன சோதனை நடந்தது. போலீசார் கூறுகையில், 'சோதனை சாவடியில், தினமும் மூன்று ஷிப்டுகளில், ஒரு எஸ்.ஐ., உள்ளிட்ட நான்கு பேர் பணியில் உள்ளனர். எங்களிடம் அதிநவீன துப்பாக்கிகள் உள்ளன.'சோதனை சாவடிகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் தெளிவாக தெரியும் வண்ணம், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X