சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்சில் துணிகரம் ரூ.1 கோடி நகை, 'அபேஸ்'

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 ஆம்னி பஸ்சில் துணிகரம் ரூ.1 கோடி நகை, 'அபேஸ்'

சங்ககிரி : ஐதராபாதிலிருந்து, கோவைக்கு, ஆம்னி பஸ்சில் எடுத்து வரப்பட்ட, 1.04 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த, 21 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஐதராபாத், பி.எம்.ஜெ., நகைக்கடை விற்பனையாளர் கவுதம், 27. அந்த கடையிலிருந்து, கோவையிலுள்ள கிளைக்கு, நேற்று முன்தினம் இரவு, வைரம் பதித்த, ஏழு நெக்லஸ், 14 ஜோடி கம்மல், ஒரு மோதிரம் என, 21 சவரன் நகைகளை பெட்டியில் வைத்து, கவுதம், பணியாளர்கள் பிரதீப், 28, சுனில்காந்த், 32, ஆகியோர், சுவாமி அய்யப்பா ஆம்னி பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே, சரவண பவன் ஓட்டலில், டிபன் சாப்பிட பஸ் நிறுத்தப்பட்டது. நகை பெட்டியை பஸ்சில் வைத்து, கவுதம் உட்பட மூவரும் சாப்பிட சென்றனர்.திரும்பி வந்தபோது, நகை பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள் மாயமாகியிருந்தன. இதன் மதிப்பு, 1.04 கோடி ரூபாய். சங்ககிரி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஆம்னி பஸ்சிலுள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகள் மூலம், மர்ம நபர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், இச்சம்பவத்தில், நகையை எடுத்து வந்தவர்களுக்கும் தொடர்புள்ளதா என, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Dharmalingam - chennai,இந்தியா
14-பிப்-202020:01:32 IST Report Abuse
Ramalingam Dharmalingam போட்டோ தவறு என்றால் செய்தி ????
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
13-பிப்-202008:59:38 IST Report Abuse
atara This can be planned task to claim Insurance claims from the Business point of view. The Jewellery can be imitation one , Still why people womens are Crazy on such costly ornamanents?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
11-பிப்-202018:39:35 IST Report Abuse
bal இவ்வளவு நகைகளை வைத்துக்கொண்டு ஏன் ஆம்னி பஸ்ஸில் பயணம்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X