அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னை : தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:'சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க, ஒரு மையத்துக்கு, 5,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்' என, சட்டசபையில், முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில், 10 ஆயிரத்து, 24 சத்துணவு மையங்களில், 5.01 கோடி ரூபாயில், காய்கறி தோட்டம் அமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக, மத்திய அரசு, 3 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

மீதமுள்ள தொகையை, மாநில அரசு வழங்குகிறது. இந்த உத்தரவை பின்பற்றி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், காய்கறி தோட்டம் அமைக்க, ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X