அரசு பணிக்கான இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: 'அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமையில்லை.இதற்காக மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், மாநில அரசின் பொதுப் பணித்துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை
அரசுபணி, இடஒதுக்கீடு, அடிப்படைஉரிமை, இல்லை

புதுடில்லி: 'அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமையில்லை.இதற்காக மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், மாநில அரசின் பொதுப் பணித்துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 'பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் கூறப்பட்டதாவது:மாநில அரசுகளின் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும்படி கோருவது அடிப்படை உரிமை அல்ல. அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு அளிக்கும்படி, மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதி செய்யும் தகவல்கள் இல்லாமல், இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது. ஒதுக்கீடு அளிக்கும்படி கோரினால், அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
10-பிப்-202021:00:30 IST Report Abuse
Enrum anbudan கோயம்பத்தூரில் நேத்து கூட்டம் போட்டு கத்தின கூமுட்டை கூட்டங்களுக்கு நல்ல செருப்படி தீர்ப்பு . வருமான அடிப்படையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் . திறமையின் அடிப்படையில் அணைத்து இட ஒதுக்கீடும் வேண்டும் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-202016:23:30 IST Report Abuse
Endrum Indian அப்படி இன்னொரு விஷயம் கெடச்சிருச்சே நாங்கள் போராடுவதற்கு என்று எதிரிக்கட்சிகள் ஒரே குதூகலமாய் இருக்கின்றன. மோடி ஆட்சியில் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை இது தான் இனி தலைப்பு CAA, NPR NRC இனிமேல் புறம் தள்ளி வைக்கப்படும். என்ன எதிரிக்கட்சிகளே சரி தானே நான் விளம்புவது.
Rate this:
Cancel
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
10-பிப்-202014:56:33 IST Report Abuse
ramakrishnan balasubramanian தேர்வே தேவை இல்லை என்று பேசுபவர்கள் எந்த அடிப்படையில் அரசாங்க வேலை வேண்டும் என்று மக்களை தெளிவு படுத்துவார்களா. ஜாதியை ஒழிப்போம் என்று கொக்கரிக்கும் பலர் சில நிறங்களின் மேல் ஆசைகொண்டு தங்களை தனிமை படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா தினமும் போராட்டம் நடத்துபவர்களை பார்த்து தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கவே பயப்படுகிறார்கள். நன்கு படிக்கும் சிலர் கூட வெட்கி தலை குனிகிறார்கள். அவர்களுக்கு என்னதான் வேண்டும் என்பதை மாணவர்களுக்கு பொது மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும் எப்போது அனைவரையும் நல்ல மனநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X