பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில், 'ஏசி' டவுன் பஸ்கள் இந்த வாரம் முதல் இயக்கம்

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 கரூரில், 'ஏசி' டவுன் பஸ்கள் இந்த வாரம் முதல் இயக்கம்

கரூர் : சென்னைக்கு அடுத்தபடியாக, கரூரில், 'ஏசி' டவுன் பஸ்கள், இந்த வாரம் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகம் முழுக்க, 21 ஆயிரத்து, 542 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மூன்று ஆண்டு களில், 5,000 புதியபஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பயணியர் தேவைகடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்த, 2,000 பஸ்கள், மக்கள் சேவைக்கு வந்துள்ளன. பயணியரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடனும் கூடிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதில், படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குறைந்த துாரத்தில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், முதியவர்களும், உடல்நலக் குறைபாடுடையவர்களும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில், கழிப்பறையுடன் கூடிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, சென்னைக்கு அடுத்து, கரூரில், 'ஏசி' டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மக்கள் வரவேற்புபோக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சென்னையில், 'ஏசி' வசதியுடன் கூடிய, 20 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கு, பயணியர் மத்தியில் வரவேற்பு உள்ளது. மேலும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளில், மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.மற்ற நகரங்களில், 'ஏசி' டவுன் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கரூரில், இரண்டு, 'ஏசி' டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.எந்த வழித்தடம் என்பது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை செய்து, முடிவு எடுக்கப்படும். இந்த வாரம், இந்த பஸ்கள் மக்கள் பயன்பாட்டு வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
King of kindness - muscat,ஓமன்
12-பிப்-202009:31:52 IST Report Abuse
King of kindness வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X