பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல், தாம்பரத்தில் நிற்காத தேஜஸ்

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் : மதுரை - சென்னை தேஜஸ் ரயில், திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளதால் தென்மாவட்ட பயணிகளின் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வியாழன் தவிர மற்ற நாட்களில் காலை 6:00 மணிக்கு புறப்படும் தேஜஸ், திருச்சி, கொடைரோடு ஆகிய 2 நகரங்களில் மட்டும் நின்று, நண்பகல் 12:30 மணிக்கு மதுரைக்கு வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:30 மணிக்கு சென்றடைகிறது. வாரவிடுமுறை, தொடர்விடுமுறை, பண்டிகை நாட்களில் மட்டுமே இந்த ரயில் முழுஅளவில் நிரம்புகிறது. மற்ற நாட்களில் காலியிடங்கள் நிறைய உள்ளன. இதற்கு முக்கிய காரணம் திண்டுக்கல், தாம்பரத்தில் இந்த ரயில் நிற்காததே.பகலில் சென்னை செல்வதால் இந்த ரயிலை மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

தென்மாவட்ட மக்கள் அதிகம் தென் சென்னை பகுதியில் தான் உள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தை இரவு 8:50 மணிக்கு கடக்கும் தேஜஸ், அங்கு நிற்பதில்லை. பயணிகள் எழும்பூர் சென்று அங்கிருந்து வீடு திரும்ப இரவு 11:00 மணியாகி விடுகிறது. சென்னையில் இருந்தும் காலை 6:00 மணிக்கு புறப்படுகிறது. அதற்குள் தென் சென்னை பகுதி மக்கள் எழும்பூர் சென்று ரயிலை பிடிக்க முடிவதில்லை.இதனால்தேஜசை அதிகம் பயணிகள் பயன்படுத்துவதில்லை. எனவே தாம்பரத்தில் நின்று செல்லும் விதத்தில் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் கிடப்பில் உள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
10-பிப்-202015:11:36 IST Report Abuse
mupaco ஏற்கனவே இயக்கபட்டது தான். நெல்லை, தென்காசி, விருதுநகர், காரைக்குடி, திருச்சி, மயிலாடுதுறை, சென்னை ரயில் அணைத்து மாவட்டத்தினருக்கும் ஏற்றது. பகலில் கூட இயக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
mupaco - Madurai,இந்தியா
10-பிப்-202014:44:52 IST Report Abuse
mupaco தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டியது தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X